Once the double leaf is available the battlefield plan again
கட்சியிலும் ஆட்சியிலும் தனித்து செயல்பட முடியாததால் மீண்டும் போர்க்கொடி தூக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீண்டகால இழுபறிகளுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி முதல்வர் பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தன. உடனடியாக பன்னீர்செல்வம் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து கடந்த 12-ம் தேதி பொதுக்குழுவை கூட்டி சசிகலா மற்றும் தினகரனை கட்சி பொறுப்புகளிலிருந்து நீக்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுச்செயலாளர் பதவிக்கு நிகரான அதிகாரங்கள் உள்ள ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளை முதல்வர் பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் எடுத்துக்கொண்டனர்.
கட்சி பன்னீர்செல்வத்துக்கு.. ஆட்சி பழனிச்சாமிக்கு என்ற அடிப்படையில் அதிகாரங்களை இருவரும் பகிர்ந்துகொண்டனர். ஆனால் என்னதான் துணை முதல்வராக இருந்தாலும் முதல்வருக்கு கட்டுப்பட்டே பன்னீர்செல்வம் இயங்க வேண்டியிருக்கிறது. பன்னீர்செல்வத்தால் தன்னிச்சையாக எதையும் செய்யமுடியவில்லை. தலைமை செயலகத்தின் அனைத்து கோப்புகளும் முதல்வரின் பார்வைக்குப் பிறகே ஒப்புதல் பெறுகின்றன. பெயரளவில் மட்டும்தான் துணை முதல்வராக இருப்பதை உணர்ந்த பன்னீர்செல்வம் தற்போது மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறாராம்.
ஆட்சியில்தான் இந்த நிலை என்றால், கட்சியிலும் இதேநிலைதான் நீடிக்கிறதாம். தனது ஆதரவாளர்களுக்கு தன்னிச்சையாக எந்த பொறுப்புகளையும் பன்னீர்செல்வத்தால் வழங்க முடியவில்லையாம். முதல்வரின் கண்ணசைவுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டிய நிலைதான் பன்னீர்செல்வத்துக்கு உள்ளதாம். ஆட்சியிலும் கட்சியிலும் தான் ஒரு செயல்பாடற்ற பொம்மையாக இருப்பதால் மீண்டும் போர்க்கொடி தூக்க திட்டமிட்டுள்ளாராம் பன்னீர்.
இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி விசாரணை தேர்தல் ஆணையத்தில் வரும் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. இரட்டை இலை சின்னத்தையு கட்சியின் பெயரையும் கைப்பற்றிய பிறகு மீண்டும் பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்க திட்டமிட்டுள்ளதாகவும் சின்னத்தை கைப்பற்றுவதற்காகவே தற்போது அமைதி காப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவலை அறிந்த மக்களின் மைண்ட்வாய்ஸ் :
என்னது.... மறுபடியும் முதல்ல இருந்தா?
