Asianet News TamilAsianet News Tamil

குட்கா விவகாரம் தொடர்பாக அவை உரிமைக்குழு கூட்டம்: துணை சபாநாயகர் பொள்ளாட்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.

குட்கா விவகாரம் தொடர்பாக அவை உரிமைக்குழு கூட்டம் துணை சபாநாயகர் பொள்ளாட்சி ஜெயராமன்  தலைமையில் நடைபெற்றது. 

On the Gudka issue they held a rights committee meeting: chaired by Deputy Speaker Pollatchi Jayaraman.
Author
Delhi, First Published Sep 7, 2020, 1:49 PM IST

குட்கா விவகாரம் தொடர்பாக அவை உரிமைக்குழு கூட்டம் துணை சபாநாயகர் பொள்ளாட்சி ஜெயராமன்  தலைமையில் நடைபெற்றது. சென்னை தலைமைச்செயலகத்தில் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவை முன்னர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக எம்எல்ஏக்கள்  குமரகுரு, குணசேகரன், திமுக சார்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆஸ்டின் மற்றும் ரகுபதி ஆகியோர் பங்கேற்றனர்.

On the Gudka issue they held a rights committee meeting: chaired by Deputy Speaker Pollatchi Jayaraman.
 
2017 ம் ஆண்டு தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா தாரளாமாக கிடைப்பதாக கூறி பேரவைக்கு எதிர்கட்சியினர் கொண்டு வந்தனர். இது தொடர்பாக  அவை உரிமைக் குழு எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட 21 பேருக்கு  நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து திமுக உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் உரிமை குழு பிறப்பித்த நோட்டீசை ரத்து செய்ததோடு, புதிதாக நோட்டீஸ் அனுப்பலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. 

On the Gudka issue they held a rights committee meeting: chaired by Deputy Speaker Pollatchi Jayaraman.

இந்த நிலையில் அவை உரிமைக் குழு கூட்டம் நடைபெறுவதாக உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டது. அக்குழுவின் தலைவர் பொள்ளாட்சி ஜெயராமன், தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் குட்கா விவகாரம் தொடர்பாக புதிதாக நோட்டீஸ் அனுப்புவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios