ஓபிஎஸ்யை வீட்டிற்கே தேடி சென்று சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்..? என்ன காரணம் தெரியுமா.?
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் கடந்த மாதம் காலமானார். இதனையடுத்து அவருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து அறுதல் கூறினார்.
ஓபிஎஸ் தாயார் மறைவு
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி காலமானர். அவரது மறைவையடுத்து தேனியில் உள்ள அவரது வீட்டிற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , ஓ.பன்னீர் செல்வத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது இரங்கலை தெரிவித்திருந்தார்.
நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர்
இந்தநிலையில் சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் நேற்று சென்னை வந்தார். இதனையடுத்து சென்னை பசுமை வழிசாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது ஓபிஎஸ் தாயார் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஓபிஎஸ்க்கு ஆறுதல் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது அமைச்சர் உதயநிதி, சேகர்பாபு, பன்ருட்டி ராமசந்திரன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதையும் படியங்கள்
எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி.. அடுத்தடுத்து அஸ்திரத்தை ஏவும் ஓபிஎஸ்.. வீழ்வாரா? எழுவாரா?