ஓமைக்ரான் வேகமாக பரவி, வேகமாக குறைந்து விட்டது.. 3வது அலை முடிஞ்சே போச்சு.. பட்டைய கிளப்பிய மா.சு

தமிழகத்தில் இதுவரை 9 கோடியே 75 லட்சத்திற்கும் அதிகமானோர், தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியுள்ளதாகவும், முதல் தவணை 90.94% பேரும், இரண்டாம் தவணை 70.46% பேர் செலுத்தி உள்ளதாக குறிப்பிட்டார். மேலும் தமிழகத்தில் இதுவரை பூஸ்டர் தடுப்பூசி 5 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு போடப்பட்டு உள்ளதாக அமைச்சர் கூறினார்.

Omicron spreads rapidly and decreases rapidly .. After the 3rd wave is over .. Minister Ma.Su Says.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த வாரம் சனிக்கிழமை நடைபெற உள்ளதால், மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படாது என்ற மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஓமைக்ரான் தொற்று வேகமாக பரவி, தற்போது விரைவாக குறைந்து வரும் சூழ்நிலையில், மூன்றாம் அலை முடிவுக்கு வந்துள்ளதாகவே எண்ணுவதாக அமைச்சர் கூறியுள்ளார். 

உலகம் முழுதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். முதல் அலை இரண்டாவது அலை முடிந்த நிலையில் மூன்றாவது அலை பல்வேறு நாடுகளில் உச்சத்தில் உள்ளது.  இந்நிலையில் இந்தியாவிலும் ஓமைக்ரான் வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது மிதமான பாதிப்புடன் வீழ்ச்சியை  சந்திக்க தொடங்கியுள்ளது. அதற்கு மக்கள் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திருப்பதும், பெரும்பாலான மக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதுமே காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே தினசரி கொரொனா பாதிப்புகள் தொடர்ந்து குறைந்த வண்ணம் உள்ளது.

Omicron spreads rapidly and decreases rapidly .. After the 3rd wave is over .. Minister Ma.Su Says.

கடந்த ஜனவரி 22ஆம் தேதி தினசரி வைரஸ் பாதிப்பு 30,000 ஆக இருந்து வந்த நிலையில் தற்போது 3,000 என்ற அளவில் உள்ளது. வரும் நாட்களில் இந்த வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கு தளர்வு வரும் பிப்ரவரி 15 உடன் முடிவடையும் நிலையில் கூடுதல் தளங்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1.6 லட்சம் பேருக்கும் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது 3 ஆயிரத்து 86 பேருக்கு மட்டுமேகொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆக்டிவில் உள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்த வண்ணம் உள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், 22வது மெகா தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது என்றும், இதுவரை 21 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் இதுவரை 9 கோடியே 75 லட்சத்திற்கும் அதிகமானோர், தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியுள்ளதாகவும், முதல் தவணை 90.94% பேரும், இரண்டாம் தவணை 70.46% பேர் செலுத்தி உள்ளதாக குறிப்பிட்டார். மேலும் தமிழகத்தில் இதுவரை பூஸ்டர் தடுப்பூசி 5 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு போடப்பட்டு உள்ளதாக அமைச்சர் கூறினார். இந்நிலையில் தமிழகத்தில் 100% தடுப்பூசி என்கிற நிலையை, 12 ஆயிரம் ஊராட்சிகளில் 2,792 ஊராட்சிகளும், 24 நகராட்சிகளும் எட்டியுள்ளதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசுகையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த வாரம் சனிக்கிழமை நடைபெற உள்ளதால், மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Omicron spreads rapidly and decreases rapidly .. After the 3rd wave is over .. Minister Ma.Su Says.

கொரோனாவினால் உயிரிழந்த மருத்துவர்களுக்கான இழப்பீடு தொகை 25லட்சம் ரூபாய் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும், மத்திய அரசு 50 லட்சம் ரூபாய் வழங்கிய சுகாதார பணியாளர்கள் குடும்பத்தினருக்கு மாநில அரசின் நிதியுதவி வழங்க வேண்டாம் என மத்திய அரசு வழிமுறைகள் வகுத்துள்ளது, அதன்படி, இதுவரையில் விண்ணப்பித்த நபர்களில் 15 விண்ணப்பங்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளது என்றார். அதுமட்டுமின்றி ஓமைக்ரான் தொற்று வேகமாக பரவி, தற்போது விரைவாக குறைந்து வரும் சூழ்நிலையில், மூன்றாம் அலை முடிவுக்கு வந்துள்ளதாகவே எண்ணுவதாக அமைச்சர் தெரிவித்தார். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios