Asianet News TamilAsianet News Tamil

OMICRON: அதிர வைக்கும் ஓமைக்ரான்.. மீண்டும் பள்ளிகளுக்கு லீவு.? பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் சூசகம்.!

டெல்டா, டெல்டா பிளஸ்ஸை தொடர்ந்து ஓமைக்ரான் வகை கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ளதால் பெற்றோர்கள் மத்தியில் பயமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கூடம் மீண்டும் மூடப்படுமா என்றெல்லாம் கேள்வி எழுந்துள்ளது.

OMICRON Shocking OMICRON .. Leave for schools again.? School Education Minister Anbil Mahesh hints!
Author
Thanjavur, First Published Dec 6, 2021, 9:23 PM IST

அடுத்த பொதுமுடக்க தளர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் ஒமைக்ரான் தொடர்பாக விவாதித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் மிக வேகமாக ஓமைக்ரான் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 21 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுடன்  தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. எனவே, ஓமைக்ரான் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் ஓமைக்ரான் வைரஸ் பற்றி எந்தத் தகவலும் இல்லை.  இருந்தாலும் ஒமைக்ரான் வைரஸ் பற்றி பதற்றப்பட வேண்டாம் என்றும், வழக்கமான கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.OMICRON Shocking OMICRON .. Leave for schools again.? School Education Minister Anbil Mahesh hints!

மாஸ்க் அணிய வேண்டும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து அரசு வலியுறுத்தி வருகிறது. பெங்களூருவில் ஓமைக்ரான் கேஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால். மாநில எல்லைகளில் தீவிர பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் 19 மாதங்களாக மூடிக் கிடந்த பள்ளிகள் கடந்த இரு மாதங்களாகத்தான் செயல்பட்டு வருகின்றன. டெல்டா, டெல்டா பிளஸ்ஸை தொடர்ந்து ஓமைக்ரான் வகை கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ளதால் பெற்றோர்கள் மத்தியில் பயமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கூடம் மீண்டும் மூடப்படுமா என்றெல்லாம் கேள்வி எழுந்துள்ளது.OMICRON Shocking OMICRON .. Leave for schools again.? School Education Minister Anbil Mahesh hints!

இந்நிலையில் இதுபற்றி தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “ஒமைக்ரான் தொடர்பாக பொது சுகாதாரத் துறையிலிருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு அதிகாரப்பூர்வமாக தகவல்கள் எதுவும் வரவில்லை. பொதுமுடக்கத் தளர்வுகள் குறித்து மருத்துவ ஆலோசனைக் குழுவைத் தமிழக முதல்வர் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது வழக்கம். அடுத்து வருகிற பொதுமுடக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் ஒமைக்ரான் குறித்து விவாதிக்கப்படும். அப்போது எடுக்கப்படும் முடிவின் அடிப்படையிலேயே எதுவும் செயல்படுத்தப்படும்” என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios