தமிழகத்தில் ஒமிக்ரான் BA4 கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் ஒருவருக்கு உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் உறுதியாகியுள்ளது. உருமாறி ஒமிக்ரான் தொற்று உறுதியான நபர் பாதுகாப்புடன் உள்ளார். சம்மந்தப்பட்ட நபரின் குடும்பத்தினரையும் பரிசோதனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒமிக்ரான் BA4 கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுதொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழகத்தில் ஒமிக்ரான் BA4 கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் ஒருவருக்கு உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் உறுதியாகியுள்ளது. உருமாறி ஒமிக்ரான் தொற்று உறுதியான நபர் பாதுகாப்புடன் உள்ளார். சம்மந்தப்பட்ட நபரின் குடும்பத்தினரையும் பரிசோதனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

புதிய வகை கொரோனா பரவும் தன்மை கொண்டது இல்லை. ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட BA4 கொரோனா தமிழ்நாட்டிலும் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் ஒமிக்ரான் BA4 வகை பரவி இருக்கிறதா என்பதைத மத்திய அரசு தெளிவுபடுத்தும்.

தடுப்பூசி செலுத்தாதோர் ஜூன் 12ம் தேதி நடக்கும் மெகா தடுப்பூசி முகாமில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.