கப்பல்கள் மோதிய விவகாரத்தில் கடந்த 8 நாட்களாக வங்காள விரிகுடா கடலே மாசுபட்டு நாசமாகி உள்ளது.
இதற்கு காரணமான துறை அமைச்சரும் தமிழகத்தின் ஒரே மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாதது போல் தமிழகத்தில் நடமாடி வருவதை சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியோடு பார்கின்றனர்.
கடந்த சனிக்கிழமை அதிகாலையில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ஈரான் கப்பலும் டான் காஞ்சிபுரம் என்ற என்னை கப்பலும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் டான் காஞ்சிபுரம் கப்பல் கடுமையாக சேதமடைந்தது.

அதிலிருந்து கசிந்த எண்ணெய் கடல் நீரில் கலந்து படலமாக மாறி விட்டது.
சுமார் நூற்றுக்கணக்கான டன்கள் எண்ணெய் படலம் வங்காள விரிகுடாவில் கலந்ததால் சென்னை எண்ணூரில் இருந்து கடைகோடி காரைக்கால் வரை கடல் நீர் கடுமையாக மாசடைந்துள்ளது.
தமிழகத்துக்கு மட்டுமே உரித்தான அரிதான கடல் ஆமையின் இனப்பருவ காலத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதால் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சென்னை கடல் நோக்கி வரும் அறிய வகை ஆமைகள் நூற்றுகணக்கில் இறந்து கரையோரம் ஒதுங்குகிறது.

கடல் நீர் மாசினால் ஏராளமான கடல் வாழ் உயிரினங்கள், இயற்கையை சமன்படுத்தும் நுண்ணிய உயிரினங்கள் ஏராளமானவை அழிந்திருக்கும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் அச்சப்படுகின்றனர்.
கப்பல்கள் மோதிய விவகாரம் ஏதோ சென்னையில் உள்ள தீயணைப்புத்துறை, கடலோர காவல்படை, சம்மந்தப்பட்ட விவகாரம் போல் எளிதாக பார்க்கப்படுகிறது.
துறைமுகத்துக்கென மத்தியில் தனி அமைச்சகம் உள்ளது. அதனுடைய இணை அமைச்சராக தமிழகத்தை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் இருக்கிறார்.

கப்பல்கள் இரண்டு மோதிக்கொள்ளும் விபத்து ஏதோ ஆட்டோ கார்கள் மோதி கொள்ளும் விபத்து போன்றது அல்ல இரண்டு விமானங்களும் இரண்டு கப்பல்களும் மோதி கொள்வவது என்பது உலகின் அரிதாக நடக்கும் விசயங்களில் ஒன்று.
இந்த விபத்து நடந்தவுடன் துறை அமைச்சர் பொன்.ராத உடனடியாக நேரில் வந்து ஆய்வு செய்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும்.
அவ்வாறு அவர் ஆய்வு செய்திருந்தால் வங்க கடலே மாசுபட்டு போயிருக்கின்ற , 8 நாளாகியும் எதுவும் செய்ய முடியாத ஒரு மோசமான நிலையை பற்றி மத்திய அரசின் கவனத்திற்கு இந்த விவகாரம் சென்றிருக்கும்.உடனடியாக மத்திய அமைச்சகத்தின் கீழ் உள்ள மற்ற துறைகளும் இயங்கி துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டிருக்கும்.

ஆனால் தனக்கு சம்பந்தமில்லாத ஜல்லிக்கட்டு, மாணவர்களின் மல்லுக்கட்டு, போன்ற விவகாரங்களில் எல்லாம் மூக்கை நுழைக்கும் பொன்னார்.
தனது துறை சார்ந்த விசயங்களில் குறைந்த பட்சம் தமிழக அமைச்சர்களிடம் கூட ஆலோசிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இந்த விவகாரம் குறித்து தனிநபர் தீர்மானம் கொண்டுவந்து பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

அதன் பின்னரும் கூட மத்திய அரசும் அமைச்சர் பொன்னாரும் விளித்து கொள்ளவில்லை.
7 நாட்களை கடந்த பின்னரும் எண்ணெய் படலம் காரைக்கால் கடற்பகுதியையும் தாண்டி பரவி வரும் நிலையில் தமிழகத்தை தாண்டி பாண்டிச்சேரியையும் இந்த பிரச்சனை பாதிக்க துவங்கியுள்ளது.
