என்ன விவகாரம்?..தமிழக அரசியல் மற்றும் அரசின் செயல்பாடுகளை நொடி பிசகாமல் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது உள்துறை அமைச்சகத்தின் ஸ்பெஷ விங் ஒன்று! அவர்கள் ஸ்மெல் செய்த படிதான் ‘தர்மயுத்தம்’ நடைபெற்ற போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதை மோடி மற்றும் அமித்ஷா இருவரும் நம்பி பன்னீரை ஆதரித்தார்கள். அணிகள் இணைந்து, துணை முதல்வரானபின் பன்னீரின் செல்வாக்கு படு பாதாளத்துக்குள் சென்றுவிட்டதையும் இந்த டீமே டில்லிக்கு சுட்டிக் காட்டியது. 

இதனால் மேலிட பார்வை எடப்பாடியார் பக்கம் எட்டிப் பார்த்தது. இப்போதோ இரு முதல்வர்களின் செல்வாக்குமே மக்கள் மத்தியில் ஆடிப்போய் இருக்கிறது! என்று டெல்லிக்கு தகவல் தந்திருக்கிறது இந்த டீம். இதன் தொடர்ச்சியாகவே, தி.மு.க. பக்கம் பி.ஜே.பி. சாய துவங்குகிறது! என்ற பேச்சுக்கள் கிளம்பின. 

இந்த சூழலில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா கொண்டாட்டத்தின் நிறைவு விழாவை வைத்து டெல்லிக்கு அழுத்தமான ஒரு சீக்ரெட் நோட்டை போட்டு அனுப்பியுள்ளது அந்த உளவு பிரிவு. அதில் ”சென்னையில் நடந்த அந்த விழா அரசு விழா. அதனால் தலைமை செயலகத்தை சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் அத்தனை பேருக்கும் அழைப்பு கலந்த உத்தரவை இட்டு விழாவில் கலந்து கொள்ள சொல்லியிருந்தனர். மேலும் விழா அமைப்பில் அத்தனை துறைகளுமே இருப்பதால் அதன் உயரதிகாரிகள் வந்து அமர்ந்திருக்க வேண்டியது ப்ரோட்டோகால். 

ஆனால் விரல் விட்டு எண்ணிட கூடிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே கலந்து கொண்டனர்!” என்று அந்த சீக்ரெட் நோட்டில் குறிப்பிட்டுள்ளார்களாம். 

இதற்கு விளக்க உரையினை மோடி மற்றும் அமித்ஷா கேட்டபோது “அரசு உயர் அதிகாரிகள் பலருக்கு, அதிலும் குறிப்பாக வாசும் சம்பளத்துக்கு உண்மையாக உழைக்கும் எண்ணம் உடையவர்களுக்கு இந்த ஆட்சியின் மீது ஒருவித எரிச்சல் தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால் அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி வட்டார தலைவர்களிடமிருந்து விலகி நிற்க துவங்கிவிட்டனர். அதன் வெளிப்பாடே பல அதிகாரிகள் இந்த விழாவை புறக்கணித்ததன் பின்னணி. 

இன்னும் சொல்லப்போனால், சில மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செனடாப் சாலை வீட்டு பக்கம் (ஸ்டாலினின் வீடு) தங்கள் தூதுவர்களை அடிக்கடி அனுப்பி, வேவு சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.” என்றார்களாம். இதைப்பார்த்தே டெல்லி வி.வி.ஐ.பி.க்கள் இருவரின் புருவமும் உயர்ந்ததாம். 

சரி, தி.மு.க. இந்த சூழலை இந்நேரம் ஸ்மெல் செய்திருக்குமே? இப்போது அவர்கள் இது பற்றி என்ன நினைக்கிறார்கள்? என்று கேட்டதற்கு “அடுத்து நம் ஆட்சிதான் என்று கனவில் மிதக்க துவங்கிவிட்டவர்கள், யார் யார் என்ன துறையை எடுத்துக் கொள்வது? என்று இப்போதே முட்டி மோத துவங்கிவிட்டார்கள்.” என்று விளக்கம் வந்ததாம். 

இதைக் கேட்டு சிரித்துவிட்டார்களாம் டெல்லி வி.வி.ஐ.பி.க்கள்.