oday meera kumae file the nomination

இன்று மனுதாக்கல் செயகிறார் மீரா குமார்….குஜராத்தில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார்…

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பொது வேட்பாளர் மீராகுமார், இன்று மனுத்தாக்கல் செய்கிறார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜுலை 25 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து வரும் 17 ஆம் தேதியன்று குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது.

பாஜக சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் கடந்த 23ம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருக்கு அதிமுக, பிஜூ ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், தெலங்கானா ராஷ்டிரிய சமீதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அவரை எதிர்த்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமார் நிறுத்தப்பட்டுள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான
இன்று மீரா குமார், தனது மனுவை தாக்கல் செய்யவுள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மீரா குமாரின் வேட்பு மனுவை முன்மொழிகிறார்.

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான மீராகுமார், எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டும் பிரசாரத்தை குஜராத் மாநிலம் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தொடங்குகிறார்.

ஜூலை முதல் வாரத்தில் திமுக தலைவர் கருணாநிதி, அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளதாக மீரா குமார் தெரிவித்துள்ளார்.