தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதனை எல்லாம் பற்றி கவலைப்படாமல் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் வாரணாசி சென்றுள்ளார். 

தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நான்கு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடரும். இதனை மனதில் கொண்டு இந்த நான்கு தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறார். 

ஆனால் துணை முதலமைச்சரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வத்திற்கு இடைத்தேர்தலைப் பற்றி எல்லாம் பெரிய அளவில் கவலை இல்லை என்கிறார்கள். எனவேதான் அவர் இடைத்தேர்தல் பணிகளையெல்லாம் பற்றி கவலைப்படாமல் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசிக்குச் சென்று தேர்தல் பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் சூட்சமம் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு தெரியும் என்று பாஜக மேலிடம் கருதுகிறது. அதே பாணியை வாரணாசியிலும் செயல்படுத்த அவரது உதவியை பாஜக மேலிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது. இன்ப அதிர்ச்சியாக இதனை கருதிய துணை முதலமைச்சர் ஓ, பன்னீர்செல்வம் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கிறது என்பதை எல்லாம் மறந்து விட்டு இப்போது வாரணாசிக்கு சென்றுள்ளார்.

 பாஜக மேலிடம் அதற்கான திட்டத்தை கூறிவிட்ட நிலையில் ஓ. பன்னீர்செல்வம் வாரணாசி சென்றுள்ளார். தமிழகத்தில் இடைத்தேர்தலை விட்டுவிட்டு ஓபிஎஸ் வாரணாசி செல்வது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தும் என்பதால் இது குறித்து அவருக்கு நெருக்கமானவர்கள் கேட்டபோது ஐயா வாரணாசியில் தங்கி விட போவதில்லை என்றும் அங்கு சில பணிகளை முடித்துவிட்டு சென்னை திரும்புவார் என்று பதிலளித்தனர்.