உடல் நலம் குன்றி தீவிர சிகிச்சையில் இருக்கும்  திமுக தலைவர்  கருணாநிதியை அவரது இல்லத்தில் பார்க்க சென்ற  பன்னீர்செல்வம் கருணாநிதியின் கையை பிடித்துக்கொண்டு கண்கலங்கியுள்ளார்.  

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றி, கடந்த ஓராண்டுக்கும் மேலாக கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருக்கிறார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் அவர் , வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகக் கடந்த 18-ம் தேதி, காவேரி மருத்துவமனைக்குச் சென்ற அவருக்கு  டிரக்யாஸ்டமி கருவியில் உள்ள பழைய குழாய் அகற்றப்பட்டு புதிய குழாய் மாற்றப்பட்டது. பிறகு அன்றே  திரும்பிய அவருக்கு சிறுநீரக தொற்று காரணமாக கடந்த 2 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். 

கருணாநிதி 24 மணி நேரமும் டாக்டர்களின்  மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். கருணாநிதியின் வீட்டிலேயே மருத்துவமனையில்  அளிக்கப்படும் சிகிச்சைக்கு  நிகராக சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது என காவிரி மருத்துவமனை செயல் இயக்குநர் அரவிந்தன் செல்வராஜ்  இன்று மாலை அறிக்கை அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க இன்று சென்னை கோபாலபுரத்திற்கு சென்றுள்ளார். அவருடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்களும் சென்றுள்ளனர். கருணாநிதி குடும்பத்தினரிடம் அவரது உடல்நிலை குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் நலம் விசாரித்தனர்.

அப்போது, கருணாநிதியின் கையை பிடித்துக்கொண்டு உருக்கமாக பேசினார். அனால்,  கருணாநிதியால் ரியாக்ஷணும், அசைவும் இல்லாமல் இருந்ததைக்கண்டு  பன்னீர்செல்வம் கண்கலங்கியுள்ளார்.  அருகில் இருந்த ஸ்டாலின், துரைமுருகன், ஜகத்ரட்சகன், டி.ஆர்.பாலு, ரகுமான் கான் கண்ணீர்விட்டு அழுதுள்ளனர். இதை பார்த்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட அனைவரும் கண்கலங்கியுள்ளனர்.