வன்முறையும் திமுகவும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்துள்ளது..! யார் கையில் காவல்துறை..? ஸ்டாலினை சீண்டும் ஓபிஎஸ்

ஆளும் கட்சியினரே வன்முறையில் ஈடுபடுவது என்பதும் வேலியே பயிரை மேய்வதற்குச் சமம். இதிலிருந்து தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை, மாறாக சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. 

O Panneerselvam has questioned who is in charge of law and order in Tamil Nadu

திமுக நிர்வாகிகளுக்குள் மோதல்

திருச்சி காவல்நிலையத்தில் திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளும் தி.மு.க.-வைச் சேர்ந்தவர்களே திருச்சியில் உள்ள காவல் நிலையத்திற்குள் சென்று ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு வன்முறையில் ஈடுபடுவதும், இந்தத் தாக்குதலில் அங்குள்ள பெண் காவலருக்கு எலுப்பு முறிவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதையும் பார்க்கும்போது, 2007 ஆம் ஆண்டு மதுரையில் பத்திரிகை அலுவலகத்தில் வன்முறைச் சம்பவமும், அதில் அப்பாவி பத்திரிகையாளர் ஏற்பட்ட வன்முறைச் உயிரிழந்ததும்தான் மக்களின் நினைவிற்கு வருகிறது.

O Panneerselvam has questioned who is in charge of law and order in Tamil Nadu

காவல்நிலையத்தில் வன்முறை

மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்கள் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை திறந்து வைத்தார். அவற்றில் ராஜா காலனி பகுதியில் அமைந்துள்ள டென்னிஸ் மைதாளந்தையும் திறந்து வைத்ததும் ஒன்று. இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திரு. திருச்சி என். சிவா அவர்கள் அழைக்கப்படவில்லை என்றும், அவரது பெயர் சுல்வெட்டில் இடம் பெறவில்லை. என்றும் தெரிவித்து, மாநிலங்களவை உறுப்பினரின் ஆதரவாளர்களுக்கும், அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வன்முறையில் முடிந்துள்ளது. இந்த வன்முறையில் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் வீட்டில் இருந்த நாற்காலிகள், இருசக்கர வாகனம், கார் கண்ணாடி ஆகியவை சேதப்படுத்தப்பட்டு உள்ளன.

O Panneerselvam has questioned who is in charge of law and order in Tamil Nadu

சட்டம் ஒழுங்கு சீரழிவு

இதுகுறித்து திருச்சியில் உள்ள நீதிமன்ற காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது,  மாநிலங்களவை உறுப்பினரின் ஆதரவாளர்கள் மீது அமைச்சரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், பதிலுக்கு மாநிலங்களவை மாநிலங்களவை உறுப்பினரின் உறுப்பினரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், இந்தத் தாக்குதலில் பெண் காவலர் ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமளையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வன்முறையில் காவல் துறையில் உள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், காவல் நிலையத்தை கலவர பூமியாக ஆளும் கட்சியினர் மாற்றியுள்ளனர். வன்முறையும், தி.மு.கவும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தது; தி.மு.க. ஆட்சி என்றால் அங்கே சட்டம் ஒழுங்கு சீரழியும்; தி.மு.க. ஆட்சி என்றால் பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இருக்காது என்பதற்கெல்லாம் எடுத்துக்காட்டாக எடுத்துக்காட்டாக காவல் நிலையத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் விளங்குகிறது. 

O Panneerselvam has questioned who is in charge of law and order in Tamil Nadu

வேலியே பயிரை மேய்கிகிறது

அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினரும் மோதிக் கொள்வது என்பதும், ஆளும் கட்சியினரே வன்முறையில் ஈடுபடுவது என்பதும் வேலியே பயிரை மேய்வதற்குச் சமம். இதிலிருந்து தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை, மாறாக சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீரழித்துக் கொண்டிருக்கும் திமுக, அரசிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அளவுக்கு வன்முறை நடைபெற்றும், காவல் துறையை தன் வசம் வைத்திருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வாய் திறக்காமல் இருப்பதைப் பார்க்கும்போது அவரது கட்டுப்பாட்டில் எதுவும் இல்லையோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்திருக்கிறது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

இபிஎஸ் உருவப்படம் எரித்த நிர்வாகி.! இரவில் நீக்கம்..! அதிகாலையில் மீண்டும் சேர்ப்பு- பாஜகவில் நடப்பது என்ன.?
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios