திருத்தணி முருகன் கோவிலின் தங்கும் விடுதிகளை விபச்சாரம் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதை  தடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான தங்கும் விடுதிகளில், விபச்சாரம், மது அருந்துவது, அசைவம் உண்பது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதாக கூறி, திருத்தணியைச் சேர்ந்த ஹர்ஷவர்த்தன் தவ்லூர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவில், கொரோனா ஊரடங்கு காலத்தில் கோவில் ஊழியர்கள் பெரியகார்த்தி, குப்பன் ஆகியோர், கோவிலுக்கு சொந்தமான தங்கும் விடுதிகளை, இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்துவதாகவும், அவர்கள் மீது கோவில் இணை ஆணையர் பழனிகுமார், அறங்காவலர் ஜெய்சங்கர் ஆகியோர் நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்கு ஆதரவாக உள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இவர்களுக்கு எதிராக சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுத்து கோவிலின் புனிதத்தை காக்க வேண்டும் என தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழ்க்கடவுள் முருகனுக்கு எதிராக பேசிய கருப்பர் கூட்டத்தை உண்டு இல்லை என்று ஆக்கி சிறைக்கு அனுப்பியுள்ள பாஜக தற்போது இந்து மக்களை ஒன்றிணைக்கும் வகையில் வேல் யாத்திரை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்க் கடவுள் முருகன் தமிழக அரசியல் களத்தில் மைப்புள்ளியாக மாறியுள்ளார் இந்நிலையில் முழுகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் ஒழுங்கீன சம்பவங்கள் நடப்பதாக வெளிவந்துள்ள இக் குற்றச்சாட்டி முருக பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஆவேசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.