சாமானியர்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத்தலைவர் டாக்டர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நடிகரும், மக்கள் நீதிமய்யம் தலைவருமான கமல் ஹாசன் தனது ட்விட்டர்பக்கத்தில், ‘’சமீபத்திய ஆய்வுகள் வேலையிழப்பும்,வருமான இழப்பும் உச்சம் தொட்டு விட்டதென்கிறது. விலை உயர்வு, தொழில் பாதிப்பு,குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு இவையனைத்தும் வரப்போகும் பஞ்சத்திற்கான கட்டியம் கூறலே. தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் இதை உணரத்துவங்கிவிட்டது. அரசே விழித்தெழு, அல்லேல் விலகிவிடு’’ எனத் தெரிவித்துஇருந்தார். 

 

அதனை டேக் செய்துள்ள மகேந்திரன், ‘’உண்மைகள் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டு, திசைத் திருப்பப்படுகின்றன. எல்லாம் நன்றாக இருப்பது போல ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார்கள்! சாமானியர்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.