Now we are the AIADMK - Mythreyan MP
அதிமுக என்றால் இனி அணி கிடையாது என்றும் அதிமுக என்றால் இனி நாங்கள் மட்டும்தான் என்றும் தினகரன் வேறு பெயரை தங்களது அணிக்கு தேர்ந்தெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் மைத்ரேயன் எம்.பி. கூறியுள்ளார்.
அதிமுக என்றால் இனி நாங்கள் தான், இனி அணி எல்லாம் கிடையாது என்று அதிமுக ராஜ்யசபா எம்பி மைத்ரேயன் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் தங்கள் அணிக்கு வேறு பெயரைத் தேடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இரட்டை இலை சின்னம், பன்னீர்-எடப்பாடி அணிக்கு ஒதுக்கப்பட்டதை குறித்து மைத்ரேயன் எம்.பி. கூறும்போது, ஜெயலலிதா இறந்த பின்னர் அதிமுக மிகப்பெரிய பிளவைக் கண்டு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் சசிகலா ஒரு அணி ஆகவும் செயல்பட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வந்தபோது இரு அணிகளும் உரிமை கோரியதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.
இந்த நிலையில், எடப்பாடி-பழனிசாமி அணிகள் இணைந்தன. தேர்தல் ஆணைய வழக்கில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் ஓ.பி.எஸ். உடன் உடப்பாடி பழனிசாமியும் ஒரு மனுதாரராக இணைந்தார். இந்த நிலையில் தேர்தல் ஆணையம் இன்று தீர்ப்பு அளித்திருக்கும் நிலையில் ஓ.பி.எஸ்., இபி.எஸ்., தலைவர்களுக்கு கிடைத்துள்ளது வெற்றி என்று மைத்ரேயன் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக என்றால் இனி அணி கிடையாது. அதிமுக என்றால் இனி நாங்கள் மட்டும்தான் என்றும் தினகரன் வேறு பெயரை தங்களது அணிக்கு தேர்ந்தெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் மைத்ரேயன் எம்.பி. கூறியுள்ளார்.
