திமுக தலைவர் கருணாநிதியுன் உடல்நிலை குறித்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவருக்கு சிறிய அளவில் காய்ச்சல் வந்துள்ளது என்றும், அக்கட்கியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றி, கடந்த ஓராண்டுக்கும் மேலாக கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருக்கிறார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் அவர் , வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகக் கடந்த 18-ம் தேதி, காவேரி மருத்துவமனைக்குச் சென்று ஒரே நாளில் வீடு திரும்பினார். அப்போது டிரக்யாஸ்டமி கருவியில் உள்ள பழைய குழாய் அகற்றப்பட்டு புதிய குழாய் மாற்றப்பட்டது.

இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை மோமடைந்துள்ளதாக இன்ற அதிகாலை முதல் தகவல் வெளியானது. இதையடுத்து தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கோபாலபுரத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.

பின்னர் அவர்   நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சிகிச்சைக்கு பிறகு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்றும்  அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.கருணாநிதியின் உடல்நிலை குறித்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும்; அவர் நலமுடன் இருக்கிறார்  எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்/