Now its fashion to do the protest by edappadi

தற்போது எல்லாம் தமிழகத்தில் போராட்டம் நடத்துவது என்பது ஒரு பேஷன் ஆகிவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

திருப்பூர் சாமளாபுரத்தில் பெண்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்த எதிர்க்கட்சி உறுப்பினரின் கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்தார்.

சாமளாபுரம் மதுக்கடை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவே காவல்துறையினர் அங்கு சென்றனர். ஆனால், அங்கு நடந்த சம்பவத்தின் பாதி தகவல்கள் தான் வெளியாகியுள்ளது. மீதி தகவல் ஊடகங்களில் வெளி வரவில்லை.

சாமளாபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்த சென்ற காவல்துறையினர் மீது, அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்தான் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். போலீசார் தங்களை பாதுகாத்து கொள்ளவே சில நடவடிக்கைகள் எடுக்க நேரிட்டது.

இதேபோன்று போராட்டங்களை பேஷன் ஆகிக்கி கொண்ட சிலர், குழந்தைகளை வைத்து கூட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுக்கு அவப்பெயரை கொண்டு வருவதற்காகவே சிலர் போராட்டங்களை தூண்டி விடுகின்றனர்.

விவசாயிகளின் வாழ்வாதார கோரிக்கைகளை முன் வைத்து, “ஐடியா” அய்யாகண்ணு உள்ளிட்டோர் பல நூதன வழிகளில் போராடி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டில் ஆரம்பித்து, கதிராமங்கலம் ஓஎன்ஜிசி பிரச்சனை, நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் பிரச்சனை, மதுகடைக்ககு எதிரான போராட்டம்என தொடர்ந்து போராட்டங்க சந்தித்து வருகிறது தமிழகம். இதனால், மிகுந்த மன உளைச்சல் மற்றும கடுப்பாகி போன எடப்பாடி பழனிச்சாமி, போராட்டத்தை தூண்டி விடுவற்காக ஒரு கூட்டம் தமிழகத்தில் செயல்பட்டு வருவதாக சட்டமன்றத்தில் தனது பதில் உரையில் பொங்கி இருக்கிறார்.

தொடர்ந்து தமிழகத்தில், நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு நல்ல தீர்வை எடப்பாடி பழனிச்சாமி தேடி கொடுப்பாரா அல்லது ஜெயலலிதா பாணியில் ஒடுக்கி விடுவாரா என பொறுத்து இருந்து பார்க்கலாம்.