Asianet News TamilAsianet News Tamil

இனி ரேஷன் கடைகளில் இதையும் கொடுங்கள்..? அவசர வழக்கு, அரசுக்கு உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு.

அவர் தனது மனுவில், மத்திய ஆயுஷ் அமைச்சகம், கபசுர குடிநீர் வினியோகத்தை விரைவுபடுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Now give this in ration shops too ..? Emergency case, High Court orders action against the state.
Author
Chennai, First Published Jun 23, 2021, 10:33 AM IST

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கபசுரகுடீநீர் பாக்கெட்களை இலவசமாக வழங்க கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சித்த மருத்துவ மருந்தான கபசுர குடிநீர் பாக்கெட்களை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக வழங்க கோரி, திருநெல்வேலியைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Now give this in ration shops too ..? Emergency case, High Court orders action against the state.

அவர் தனது மனுவில், மத்திய ஆயுஷ் அமைச்சகம், கபசுர குடிநீர் வினியோகத்தை விரைவுபடுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனா தொற்று பாதித்து பலியாவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும், பதிவு செய்யப்பட்ட சித்த மருத்துவர்களை கொண்டு சித்தா சிகிச்சை முகாம்களை நடத்த வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.  இதுசம்பந்தமாக தமிழக அரசுக்கு அளித்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Now give this in ration shops too ..? Emergency case, High Court orders action against the state.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு, இது மாநில அரசின் கொள்கை சம்பந்தப்பட்டது எனவும், கபசுர குடிநீரின் நோய் எதிர்ப்பு திறனை அறிவியல் பூர்வமாக மதிப்பீடு செய்ய வேண்டும் எனக் கூறியதுடன், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios