Asianet News TamilAsianet News Tamil

தப்லீக் ஜமாத் மாநாட்டை நடத்தி குந்தகம்... நோட்டீஸ் மேல் நோட்டீஸ் அனுப்பி மவுலானா சாத்துக்கு வலை..!

டெல்லியில் நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத் மாநாடு நடத்தியது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் அளித்த பதிலில் காவல்துறையினருக்கு  திருப்தி ஏற்படாததால் அவருக்கு 5- வது நோட்டீஸ் அனுப்ப டெல்லி காவல்துறை முடிவு செய்துள்ளது. 

Notice to Maulana Sattu, who held the Tablique Jamaat Conference
Author
Tamil Nadu, First Published May 2, 2020, 3:58 PM IST

டெல்லியில் நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத் மாநாடு நடத்தியது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் அளித்த பதிலில் காவல்துறையினருக்கு  திருப்தி ஏற்படாததால் அவருக்கு 5- வது நோட்டீஸ் அனுப்ப டெல்லி காவல்துறை முடிவு செய்துள்ளது. Notice to Maulana Sattu, who held the Tablique Jamaat Conference

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பாதிப்பை தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு சமூக விலகல் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், டெல்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத்தில் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றாக கூடி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையறிந்து சுகாதாரத்துறையினர் மாநாட்டில் கலந்து கொண்டவர்களை அப்புறப்படுத்திய நிலையில் அங்கிருந்தவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் மாநாட்டில் பங்கேற்ற பலருக்கும் கொரோனாவால் தொற்று இருப்பது ஊர்ஜிதமானது. 

இதனையடுத்து  தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைவர் மவுலானா சாத் கந்தால்வி மீது அரசு உத்தரவுகளை மீறியதாக தொற்று நோய்கள் சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்ய்ப்பட்டது. தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத்தை டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு போலீசார் 4 முறை அழைத்து விசாரணை நடத்தினர். ஆனால் அவரது பதில் திருப்தி இல்லாததால் அவருக்கு 5-வது நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்து உள்ளனர்.Notice to Maulana Sattu, who held the Tablique Jamaat Conference

நான்காவது விசாரணையில் புலனாய்வு நிறுவனம் மார்க்கஸின் வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோக்கள் குறித்த விசாரணை நடத்தியது. இருப்பினும், குற்றப்பிரிவின் அறிவிப்புக்கு எதிராக மதத் தலைவர் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மவுலானா சாதின் மூன்று மகன்களையும் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.Notice to Maulana Sattu, who held the Tablique Jamaat Conference

தப்லீக் ஜமாத் மற்றும் வளைகுடா நாடுகளுடன் தொடர்புடைய பல வங்கிக் கணக்குகளுக்கு இடையே கோடி ரூபாய் பரிவர்த்தனை நடந்ததாக குற்றப்பிரிவு போலீசார் அமலாக்க இயக்குநரகத்திற்கு அறிவித்தனர். பரிவர்த்தனைகளில் ஈடுபட்டவர்கள் நிஜாமுதீன் மார்க்கஸுடன் தொடர்புடையவர்கள் என்றும், மவுலானா சாத் உடன் நெருக்கமானவர்கள் என்றும் கூறி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios