அதிரடி காட்டும் மத்திய அரசு..! 15 பேருக்கு பறந்தது நோடீஸ்..! 

வெளிநாட்டு வங்கியில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வரப்படும் என மத்தியில் ஆளும் பாஜக ஏற்கனவே தெரிவித்து இருந்தது. 

இந்நிலையில்  நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையுடன் மீண்டும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது பாஜக. இதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார்.

அதன்பின் பதவியேற்று 3 நாட்களே ஆன நிலையில் சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம் வைத்திருப் பவர்களில்15 பேருக்கு சுவிஸர்லாந்து அரசின் வரி நிர்வாக பிரிவு நோட்டீஸ் அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி கருப்பு பணம் வைத்திருக்கும் நபர்களின் பட்டியலை வெளியிடுமாறு சுவிஸர்லாந்து அரசுக்கு மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. முதல் கட்டமாக தற்போது இந்தியாவை சேர்ந்த 15 தொழிலதிபர்களுக்கு சுவிஸர்லாந்து அரசின் வரி நிர்வாக பிரிவு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மேலும், அடுத்தடுத்து வரும் வாரங்களில் பலருக்கு நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இதன்மூலம் இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றிய பாஜக தலைமையிலான மத்திய அரசு தற்போது கறுப்பு பணத்தை மீட்கும் பணியை தொடங்கியுள்ளது என பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.