முதல்வர், துணை முதல்வர் இடையே போரும் இல்லை. வாரும் இல்லை என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக நாகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன்;- தமிழகத்தில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2016-ல் ஆண்ட கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்து அதிமுக சரித்திரம் படைத்துள்ளது. அதுமட்டுமல்ல 234 தொகுதியிலும் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு, தேர்தலில் வெற்றி பெற்றுக் காட்டியிருக்கிறது. எனவே, கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை.

முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் போரும் இல்லை. வாரும் இல்லை. துணை முதல்வரை மூத்த அமைச்சர்கள் சந்தித்து பேசுவது வழக்கமான ஒன்று தான். மழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், பேசிய அவர் சிகலா வெளியே வந்தபின் அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்பாரா என்ற கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், கடந்த காலத்தை பற்றி பேச வேண்டாம். நிகழ்காலத்தை பற்றி பேசுவோம் என்றார்.