Asianet News TamilAsianet News Tamil

ஸ்டாலின் மட்டும் இல்ல ஒவ்வொரு திமுக தொண்டனும் இந்த படத்தை பாருங்க.. வி.பி துரைசாமி கண்ணீர்.

தமிழ்நாட்டில் உள்ள எட்டு கோடி மக்களும் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும். பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் ஒன்றிய அரசு, திராவிட மாடல் என்று கூறும் முதலமைச்சர் ஸ்டாலின் தயவு செய்து இந்த படத்தை பார்க்கவேண்டும். 

Not only Stalin but every DMK activist should watch this movie .. VP Duraisamy Tears.
Author
Chennai, First Published Mar 17, 2022, 12:02 PM IST

பிரிவினைவாதத்தை தூண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி துரைசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள எட்டு கோடி மக்களும் இத்திரைப்படத்தைப் பார்க்க வேண்டுமென பாஜகவின் தொண்டனாக கேட்டுக்கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் வெளியானாலும், ஒரு சில திரைப்படங்களே சமூகத்தில் தாக்கத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்துகின்றன.அந்த வகையில் தமிழில் ஜெய்பீம் என்ற திரைப்படம் வெளியாகி உலக அளவில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. தற்போது காஷ்மீர் பைல்ஸ் என வட இந்தியாவில் வெளியாகியுள்ள இந்தி திரைப்படம் பெரும் அதிர்வலைகளை வரவேற்பையும் பெற்றுள்ளது. காஷ்மீரில் பண்டிட் சமுதாய மக்கள் எப்படி மத அடிப்படைவாத குழுக்களால் பாதிக்கப்பட்டது, அங்குள்ள தீவிரவாத குழுக்களால் இந்து இளைஞர்கள் எவ்வாறு படுகொலை செய்யப்பட்டனர் என்பதை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: "வட இந்திய சத்ரியர் யோகிக்கு, வன்னிய குள சத்திரியர்களின் வாழ்த்துக்கள்".. கண்ணை கட்டவைக்கும் போஸ்டர்.

Not only Stalin but every DMK activist should watch this movie .. VP Duraisamy Tears.

இப்படத்தைப் பார்த்த பாரதப் பிரதமர் மோடி உடனே அப்படக் குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் இப்படத்துக்கு வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இப்படம் பார்க்க அரசு ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இது  தமிழகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, பேசுபொருளாகவும் இல்லை. ஒரு சில திரையரங்குகளில் மட்டுமே படம் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் பாஜக தலைவர்களை படத்தை திரையில் பார்த்துவிட்டு அனைவரும் இப்படத்தை தவறாமல் பார்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படத்தை பார்த்துவிட்டு தமிழக மக்கள் அனைவரும் படத்தை பார்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அந்த வரிசையில் கோயம்பேடு ரோகிணி திரையரங்கத்தில் காஷ்மீர் பேல்ஸ் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் கரு. நாகராஜன்,  துணைத்தலைவர் வி.பி துரைசாமி உள்ளிட்டோர் பார்த்தனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த வி.பி துரைசாமி பாஜக தொண்டன் என்ற முறையில் சொல்கிறேன், தமிழ்நாட்டில் உள்ள எட்டு கோடி மக்களும் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும். பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் ஒன்றிய அரசு, திராவிட மாடல் என்று கூறும் முதலமைச்சர் ஸ்டாலின் தயவு செய்து இந்த படத்தை பார்க்கவேண்டும். காஷ்மீர் பைல்ஸ் என்பது  படம் அல்ல காஷ்மீரில் உள்ள இளைஞர்கள் தீவிரவாத குழுக்களால் எப்படி கொடுமைக்கு ஆளானார்கள் என்று காட்டும் பாடம்.

Not only Stalin but every DMK activist should watch this movie .. VP Duraisamy Tears.

இதையும் படியுங்கள்: Samantha Pushpa song: கோடிகளில் வியூஸை குவித்த சமந்தாவின் புஷ்பா பட பாடல்..! ஒரே ஸ்டேப்...வேர்ல்ட் ஹிட்..!

படம் பார்க்க தொடங்கியதிலிருந்தே அழுதுக்கொண்டே இருந்தேன், படத்தைப் பார்த்தவுடன் தேசபக்தி அதிகரித்துள்ளது. ஒவ்வொரு திமுக தொண்டன் இப்படத்தைப் பார்த்தால் ஒரு புதிய பாடம் கிடைக்கும். சட்டம் 370 திருத்தப்பட்ட பின்னர் காஷ்மீரில் எவர் வேண்டுமானாலும் சொத்து வாங்கலாம் என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இதைதான்  4 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்றார். அவரைத்  தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி,  32 வருடங்கள் மறைக்கப்பட்ட வரலாறு திரைப்படத்தின் மூலமாக வெளிவந்துள்ளது. சிறுபான்மையினரான இந்துக்களை கொலை செய்து சொந்த நாட்டிலே அகதிகளாக்கப்பட்ட கதை. மத அடிப்படைவாதிகள் இந்து மத சிறுபான்மையினரை வைத்து என்னென்ன செய்தார்கள் என்று படம் விளக்கியுள்ளது என கூறியுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios