MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • Mamata Banerjee: ராஜினமா செய்ய மறுக்கும் மம்தா பானர்ஜி.! மேற்கு வங்கத்தில் அடுத்து நடக்கபோவது இதுதான்.! அதிரடி திருப்பங்கள்.!

Mamata Banerjee: ராஜினமா செய்ய மறுக்கும் மம்தா பானர்ஜி.! மேற்கு வங்கத்தில் அடுத்து நடக்கபோவது இதுதான்.! அதிரடி திருப்பங்கள்.!

Mamata Banerjee Resignation News : தேர்தலில் தோல்வி அடைந்துள்ள நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதவி விலக மறுப்பு தெரிவித்து வருகிறார். இதுகுறித்து அரசியலமைப்பு சட்டம் என்ன சொல்கிறது என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : May 06 2026, 03:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
ராஜினாமா செய்ய மறுக்கும் மம்தா பானர்ஜி
Image Credit : ChatGPT

ராஜினாமா செய்ய மறுக்கும் மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வந்தது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி. இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. நான்காவது முறையாக ஆட்சியைப் பிடிப்பார் என்று கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில் மம்தா பானர்ஜி தனது சொந்த தொகுதியிலேயே தோல்வியை தழுவி இருக்கிறார். மேலும் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மம்தா மறுத்து வருகிறார். தோல்விக்குப் பிறகும் பதவியில் நீடிப்பது குறித்து சட்டம் மற்றும் அரசியலமைப்பு ரீதியான நடைமுறைகள் குறித்து இங்கு காணலாம்.

27
முதல்வராக தொடர்வதற்கு இரண்டு தகுதிகள் வேண்டும்
Image Credit : Asianet News

முதல்வராக தொடர்வதற்கு இரண்டு தகுதிகள் வேண்டும்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி ஒரு முதலமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டுமானால் இரண்டு தகுதிகள் அவசியமாகும். அவரது கட்சி அல்லது கூட்டணி சட்டசபையில் பெரும்பான்மை எண்ணிக்கையை கொண்டிருக்க வேண்டும் அல்லது அவர் அந்த மாநிலத்தின் சட்டசபை உறுப்பினராக இருக்க வேண்டும். தேர்தலில் ஒரு முதல்வர் தனது தொகுதியில் தோற்றுப் போனாலும் அவரது கட்சி பெரும்பான்மை பெற்றிருந்தால் அவர் பதவியில் நீடிக்கலாம். அதே சமயம் அந்த கட்சி பெரும்பான்மையை இழந்து விட்டால் அவர் சட்டப்படி ராஜினாமா செய்தே ஆக வேண்டும்.

Related Articles

Related image1
ADMK TVK Alliance : சி.வி.சண்முகம் கையில் 30 MLA-க்கள்.! சுக்குநூறாக உடையும் அதிமுக..! TVK-க்கு ஆதரவு தர திட்டம்?
Related image2
அதிமுக திமுக கூட்டணி அமையுமா? விஜயை பழிவாங்க நடக்கப்போகும் ட்விஸ்ட்? தாய் கழகத்துடன் கை கோர்க்குமா அதிமுக?
37
ஆளுநர் என்ன முடிவெடுப்பார்?
Image Credit : X

ஆளுநர் என்ன முடிவெடுப்பார்?

ஒரு முதலமைச்சர் பெரும்பான்மையை இழந்த பிறகும் தானாக முன்வந்து ராஜினாமா செய்யவில்லை என்றால் பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்டசபையில் பெரும்பான்மை இல்லை என்பது உறுதியானால் ஆளுநர் முதலமைச்சரை உடனடியாக ராஜினாமா செய்ய அறிவுறுத்துவார். முதல்வர் மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் சட்டமன்றத்தைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிடுவார். இதில் முதல்வர் தனது பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினால் அவர் பதவியை இழந்ததாக அறிவிக்கப்படுவார்.

47
குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம்
Image Credit : X

குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம்

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்ற பிறகும் முதல்வர் பதவியை விட்டு விலகவில்லை என்றால் ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 164 பயன்படுத்தி முதலமைச்சரையும் அவரது அமைச்சரவையும் பதவி நீக்கம் செய்வார். பின்னர் மாநிலத்தில் நிலையான ஆட்சி அமைக்க பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்டிருக்கும் கட்சியை அவர் ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுப்பார். இது எதுவுமே நடக்காத சூழலில் ஆட்சி அமைக்க யாராலும் முடியாத சூழல் ஏற்படும் பட்சத்தில் ஆளுநர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வார்.

57
தேர்தலில் தோற்ற ஒருவர் முதல்வராக முடியுமா?
Image Credit : ChatGPT

தேர்தலில் தோற்ற ஒருவர் முதல்வராக முடியுமா?

அரசியலமைப்புச் சட்டத்தின் 356 வது பிரிவின்படி மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும். அதன் பின்னர் ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு பெரும்பான்மை பெறும் கட்சி ஆட்சியில் அமர்த்தப்படலாம். தேர்தலில் தோற்ற ஒருவர் முதல்வராக இருக்க முடியுமா? என்பதற்கு மம்தா பானர்ஜியை சிறந்த உதாரணமாக இருக்கிறார். ஒரு நபர் சட்டமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும் முதல்வராக பதவி ஏற்கலாம். ஆனால் பதவி ஏற்ற தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, சட்டசபைக்குள் நுழைய வேண்டும்.

67
மேற்கு வங்கத்தின் புதிய முதலமைச்சர் யார்?
Image Credit : X

மேற்கு வங்கத்தின் புதிய முதலமைச்சர் யார்?

2021 ஆம் தேர்தலின் போது நந்திகிராம் தொகுதியில் போட்ட மம்தா பானர்ஜி தோல்வியைத் தழுவினார். இருப்பினும் அவரது கட்சி பெரும்பான்மை பெற்றதால் அவர் முதல்வராக பதவியேற்றார். பின்னர் ஆறு மாதங்களுக்குள் பவானிபூர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று வெற்றியை தக்க வைத்தார். இந்த நிலையில் மீண்டும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் பவானிபூர் பகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தனது முன்னாள் வலதுகரமாக இருந்தவரும், தற்போதைய பாஜகவின் மேற்கு வங்க மாநில தலைவருமான சுவேந்து அதிகாரியிடம் தோல்வியை தழுவியிருக்கிறார். இதையடுத்து சுவேந்து அதிகாரி மேற்கு வங்கத்தின் புதிய முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

77
ஆளுநரின் அதிகாரமே முக்கிய பங்கு வகிக்கும்
Image Credit : X.com

ஆளுநரின் அதிகாரமே முக்கிய பங்கு வகிக்கும்

மம்தா பானர்ஜி போன்ற ஒரு பலமான தலைவர் ராஜினாமா செய்ய மறுக்கிறார் என்றால் அவர் தனது கட்சிக்கு இன்னும் பெரும்பான்மை இருக்கிறது என்று நம்புகிறார் அல்லது சட்ட ரீதியான ஓட்டைகளை தேடுகிறார் என்று பொருள். ஆனால் சட்டசபையில் எண்களின் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் எந்த ஒரு முதல்வர் ஆனாலும் நீண்டகாலம் பதவியில் நீடிக்க முடியாது. ஆளுநரின் அதிகாரமே அங்கு முக்கிய பங்கு வகிக்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ADMK Clash: மீண்டும் அதிமுகவில் அதிரடி.! இபிஎஸ்க்கு எதிராக ஒன்றுதிரண்ட அதிமுகவினர்?! ஓபிஎஸ் போல் ஓரங்கட்டப்படும் எடப்பாடி பழனிச்சாமி.!
Recommended image2
Vijay: தளபதியின் 'கோல்டன்' பாலிடிக்ஸ்! ஒவ்வொரு வருடமும் 2000 கி. தங்கம் - தாங்குமா தமிழக நிதிநிலை?
Recommended image3
TVK - CONGRESS: திமுக கூட்டணி' டமால்! தளபதி விஜய் ஆட்சி அமைக்க நிபந்தனையுடன் காங்கிரஸ் ஆதரவு! என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா?
Related Stories
Recommended image1
ADMK TVK Alliance : சி.வி.சண்முகம் கையில் 30 MLA-க்கள்.! சுக்குநூறாக உடையும் அதிமுக..! TVK-க்கு ஆதரவு தர திட்டம்?
Recommended image2
அதிமுக திமுக கூட்டணி அமையுமா? விஜயை பழிவாங்க நடக்கப்போகும் ட்விஸ்ட்? தாய் கழகத்துடன் கை கோர்க்குமா அதிமுக?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved