பா.ஜ.,கட்சி டெல்லிக்கு மட்டுமல்ல, தமிழகத்திலும் ராஜாதான் என்று அக்கட்சியில் தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘பா.ஜனதா டெல்லிக்கு மட்டுமல்ல, தமிழகத்திலும் ராஜாதான். பா.ஜனதா கூட்டணியில்தான் அதிமுக உள்ளது. கோவிலை அழிக்கும் துறையாக இந்து சமய அறநிலைத்துறை செயல்பட்டு வருகிறது. ஆன்லைன் பாடத்தால் தற்கொலை செய்து கொள்வதால் தடை செய்யச் சொல்கிறார்கள். காதலால் தற்கொலை நடப்பதால் காதலை தடை செய்ய சொல்ல முடியுமா?’’ரஜினி ஆளுமையான ஆள் என்பதால், அவர் பாஜகவில் சேர்வது குறித்து நான் கருத்து கூற முடியாது. 

மத்திய பாஜக அரசு மீதான குற்றச்சாட்டு என்பது இடிந்த திராவிடத்தின் அழுகிய மூளையின் பேச்சு. தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின்கீழ் ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கு அதிகமாக உள்ள கோயில்களின் சொத்துகள், வருமானத்தை தணிக்கை செய்ய வேண்டும். கோவில் காணிக்கைகள் கொள்ளையடிக்கப்படுகிறது என்பதை ஆதாரத்தோடு கூறுகிறேன். அறநிலையத்துறையால் கோயில்களில் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்படுகிறது. கோயில்களை அழிக்கும் துறையாக அறநிலையத்துறை செயல்படுகிறது’’ என அவர் தெரிவித்தார்.