தமிழகத்தில் இருக்கும் இரண்டு கட்சிகளும் கழக கட்சிகளே அன்றி திரவிட கட்சிகள் அல்ல;பாஜக இல்லாமல் தமிழகத்தில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என நாகர்கோவிலில் பொங்கியெழுந்திருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தோம்.வரக்கூடிய சட்டமன்றத்தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது.அது பாஜக தலைமை தான் தெரிவிக்கும்.வரும் சட்டமன்ற தேர்தலுக்கு பின் தமிழகத்தில் பாஜக அங்கம் வகிக்கக்கூடிய ஆட்சி தான் அமையும்.

     தேர்தல் முடிவுகள் ஒரு கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெரும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களது ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டால் அ.தி.மு.க அல்லது தி.மு.க வுடன்.பாஜக.. ஆட்சியிலும் பங்கேற்கும்.தொங்கு சட்டசபை அமைந்தபோது ஒரு முறை கலைஞர் தலைமையில் ஆட்சி நடைபெற்றது. அப்போது இருந்த சூழ்நிலை தற்போது இல்லை.

 ரஜினி எப்போது வருவார் என்பதை அவர் தெரிவிக்காத நிலையில் அது குறித்து இப்போது கருத்து சொல்வது சரியாக இருக்காது. கன்னியாகுமரி நாடளுமன்ற இடைத் தேர்தல் இல்லாதவருக்கும்,இருப்பவருக்கு இடையில் நடக்கும் போட்டி.சட்டமன்ற தேர்தலில் இரண்டு அணிகள் என்பதை கடந்து மூன்றாவது அணியும் களத்தில் நிற்கலாம் என பொன்.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தேமுதிக தனித்து சட்டமன்றத்தேர்தலை சந்திக்கும் என்று சொல்வது போல அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் அவர்கள் பலம் தெரிந்து விடும்.