Asianet News TamilAsianet News Tamil

இனி ஒரே ஒரு ரவுடிகூட வாலாட்டக்கூடாது.. 36 மணி நேரத்தில் கிளீன் தமிழ்நாடு ஆக்கிய டிஜிபி சைலேந்திர பாபு.

இதுவரை 244 குற்றவாளிகள் நீதிமன்ற வழக்குகளில் பிடியாணையின்படி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 733 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Not a single rowdy should be tailed anymore .. DGP Silenthra Babu who made Tamil Nadu clean in 36 hours.
Author
Chennai, First Published Sep 25, 2021, 12:20 PM IST

தமிழக காவல்துறை அதிரடியாக நடத்திவரும் ஸ்டாமிங் ஆபரேஷன் மூலம் இதுவரை 2,512 ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடமிருந்து 934  கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சமீபகாலமாக முன்விரோதம் காரணமாக ரவுடிகள் இடையே மோதல் ஏற்பட்டு கொலை நடக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. சென்னை கே.கே நகரில் முன்விரோதம் காரணமாக வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பானது. அதேபோல மயிலாப்பூரில் ரவுடி மயிலை சிவக்குமாரின் உதவியாளர் கொலை சம்பவம் சட்டம் ஒழுங்கை கேள்வி எழுப்பியது, தமிழகத்தில் பரவலாக ஆங்காங்கே கொலைகள் அரங்கேறி வரும் நிலையில், தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட எஸ்.பிக்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். 

Not a single rowdy should be tailed anymore .. DGP Silenthra Babu who made Tamil Nadu clean in 36 hours.

அதில் ஸ்டாமிங் ஆபரேஷன்  என்ற பெயரில் கடந்த 5 ஆண்டுகளில் கொலை வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீட்டை கண்காணித்து அவர்கள் பதிவு வைத்திருக்கும் ஆயுதங்களை பறிமுதல் செய்து அவர்களை கைதுசெய்ய உத்தரவிட்டார். தமிழக காவல்துறை மூலம் DARE Operation என ரவுடிகளுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது, அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி தொடர்ந்து தமிழகம் முழுவதும் குற்றப் பதிவேடு உள்ள ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள், அவர்கள் பதுங்கும் இடங்களில் ஸ்டாமிங் ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டது, 36  மணி நேரம் நடத்தப்பட்ட இந்த ஸ்டாமிங் ஆபரேஷன் மூலம் தமிழகம் முழுவதும் 16,370  இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 2,512 ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

Not a single rowdy should be tailed anymore .. DGP Silenthra Babu who made Tamil Nadu clean in 36 hours.

இதுவரை 244 குற்றவாளிகள் நீதிமன்ற வழக்குகளில் பிடியாணையின்படி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 733 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட இந்த ஆபரேஷனில் 5 நாட்டுத் துப்பாக்கிகள், 929 கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் என மொத்தம்  934 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த நடவடிக்கை தொடரும் என்றும் காவல்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios