வட கிழக்கு பருவமழை தொடங்கியது..!! தமிழக மக்களே இனி எச்சரிக்கையாக இருங்க..!! வானிலை ஆய்வு மையம் அதிரடி.

வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் துவங்கியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

North East monsoon has started, People of Tamil Nadu, be careful now, Meteorological Center Action.

தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து விலகி, வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் துவங்கியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது. 

North East monsoon has started, People of Tamil Nadu, be careful now, Meteorological Center Action.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும் என தகவல் தெரிவித்துள்ளது.

North East monsoon has started, People of Tamil Nadu, be careful now, Meteorological Center Action.  

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம் (சென்டிமீட்டரில்) :

மேலூர்  ARG (மதுரை) 6 சென்டிமீட்டர் மழையும், மானாமதுரை (சிவகங்கை), திருபுவனம்  (சிவகங்கை) தலா தலா 5 சென்டிமீட்டர் மழையும்,ராமேஸ்வரம் (ராமநாதபுரம்) 4 சென்டிமீட்டர் மழையும், மண்டபம்  (ராமநாதபுரம்) 3 சென்டிமீட்டர் மழையும், இரணியல் (கன்னியாகுமாரி), செய்யூர் (செங்கல்பட்டு), ராஜபாளையம் (விருதுநகர்), பண்ருட்டி (கடலூர்), மேலூர் (மதுரை), வீரபாண்டி (தேனீ ) தலா 2 சென்டிமீட்டர் மழையும். பதிவாகி உள்ளது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios