சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு எதிராக உச்ச நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியது . அதாவது ஜெயலலிதா இறந்து சரியாக 72 ஆவது நாளான இன்று, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா , சென்னை அப்போல்லோ மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த நாட்களும் 72 என்பது குறிப்பிடத்தக்கது. தீர்ப்பு வெளியான இந்நிலையில் தற்போது , இவர்கள் நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.
தமிழக போலீசார் சோதனை :
இந்நிலையில் எந்த நேரத்திலும், சசிகலா உள்ளிட்டோரை கைது செய்து, பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உள்ளதால், இதற்கு முன்னதாக, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையை தமிழக காவல் துறையினர் தற்போது சோதனை செய்து வருகின்றனர்.
எந்த விஷேச சலுகையும் இல்லை :
முன்னதாக , இதே சொத்த குவிப்பு வழக்கில், மறைந்த முதல்வர் கைதான போது, அவருக்கு சிறையில் வழங்கப்பட்ட A பிரிவு வசதி, சசிகலாவுக்கு வழங்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறையில் எந்த விசேஷ சலுகையும் காட்டக்கூடாது எனவும் கடுமையாக தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து , சசிகலாவிற்கு சிறையில் சாதாரண அறை தான் ஒதுக்கப்படும் என தெரிகிறது.
