Fact Check : மீன் சாப்பிடுபவர்கள் யாரும் இந்துக்கள் அல்ல என்று அண்ணாமலை கூறினாரா ? உண்மை நிலவரம் என்ன ?
மீன் சாப்பிடுபவர்கள் யாரும் இந்துக்கள் அல்ல என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக செய்தி பரவியுள்ளது. இந்த தகவல் உண்மைதானா? என்று ஆய்வு செய்ய ஆரம்பித்தோம்.
மீன் சாப்பிடுபவர்கள் இந்துக்களாக இருக்க முடியாது என்று ஊடகங்களில் வெளியான தகவலின் அடிப்படையில், நமது ஏசியாநெட் நியூஸ் தமிழ் தளத்திலும் அந்த தகவலை செய்தியாக வெளியிட்டிருந்தோம்.Tamil Factcrescendo நடத்திய ஆய்வில் (https://tamil.factcrescendo.com/fake-news-spreading-that-annamalai-commented-that-fish-eaters-not-hindus/?fbclid=IwAR2ev-VvuowPKT3S-dfafN0NWBQt8hkElQtLZouvimnS1qN-qlbj8g9YQGY), அந்த தகவலில் உண்மையில்லை என்று தெரிவித்ததையடுத்து, இதுதொடர்பாக நாம் வெளியிட்ட செய்தியை மாற்றியமைத்துவிட்டோம்.
கடந்த ஜனவரி மாதம், சென்னை குயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கோயில் கட்டிட நிலத்தில் மீன் சந்தை கட்டிக் கொடுக்கப்படுவதாக வெளியான செய்திக்கு, பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மீன் சாப்பிடுபவர்கள் யாரும் இந்துக்கள் இந்துக்கள் அல்ல என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்து இருந்ததாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியது.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், 'சென்னை குயப்பேட்டை போன்ற இடங்களில் மீனவர்களுக்கு மீன் சந்தை கட்டி கொடுப்பது அரசின் வேலையா அல்லது இந்து சமய அறநிலையத்துறையின் வேலையா ? இந்து கோவில் கட்டடத்தில் மீன் சந்தை கட்டுவது நியாமில்லை' என்று கூறியுள்ளார்.
ஆனால் இந்த செய்தியை பல்வேறு ஊடகங்களும் பல்வேறு விதமாக வெளியிட்டுள்ளனர். உண்மையில் இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிலத்தில் மீன் சந்தை கட்டுவதற்கு எதிர்ப்பையிம், கண்டனங்களையும் மட்டுமே அண்ணாமலை கூறியுள்ளார். சமூக ஊடகங்களில் இது திரித்து வெளியிடப்பட்டுள்ளது உறுதியாகிறது. அண்ணாமலை அப்படி கூறவில்லை என்று தெரிகிறது.