காங்கிரஸ் இல்லாமல் கூட்டணி அமைத்தால் அந்த கூட்டணி பாஜகவிற்கு பலனளிக்கும், இதை நாங்கள் செல்லுதை விட எங்கள் நண்பர்கள் சொல்வதை விட பாஜக வினுடைய நீண்ட நாட்கள்  உறவோடு இருந்த  சிவசேனா இதை தெரிவித்துள்ளது. 

பாஜகவில் முதன்மை படுத்துவதற்கு எந்த தலைவர்களும் இல்லை எனவே அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்த சர்தார் வல்லபாய் பட்டேலை முன்னிலைப் படுத்தி வருகின்றனர் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் 137வது நிறுவன தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. 

சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 150 அடி உயர மகாத்மா காந்தி நினைவு கொடிக்கம்பத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து சேவாதள தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து காந்தி ஜவஹர்லால் நேரு, காமராஜர், லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, தீரர் சத்தியமூர்த்தி, உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினுடைய சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் மூத்த தலைவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஒரிசா மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் செல்லக்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் கோபண்ணா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே எஸ் அழகிரி: மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் பாதிப்பு ஏற்பட்டு இவ்வளவு நாட்கள் கழித்தும் இன்னும் வெள்ள நிவாரணம் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கவில்லை வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு காவிரி டெல்டா முற்றிலும் சேதமடைந்து. விவசாயிகளை பாதிக்கப்பட்டுள்ளது 4625 கோடி ரூபாய் மாநில அரசு மத்திய அரசிடம் வெள்ள நிவாரணத் தொகை அதிகரித்துள்ளது என உடனடியாக மத்திய அரசின் இந்த தொகையை வழங்க வேண்டும். தமிழகத்தில் ஏராளமான கைத்தறி நூல் சங்கங்கள் இருக்கின்றன எனவே முதலமைச்சர் அவர்கள் பள்ளி குழந்தைகளுக்கு கைத்தறித் துணிகளை சீருடைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இதன் மூலம் கைத்தறி தொழில் பயன்பெறும் கொரானா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதில் மாநில அரசும் சுகாதாரத் துறையும் நன்கு செயல்படுகின்றன பொதுமக்கள் இரண்டு தடுப்பூசிகளையும் கட்டாயம் பெற்றுக்கொள்ளவேண்டும் போட்டுக் கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் தோழர்கள் தங்கள் நண்பர்கள் குடும்பத்தார் என யார் தடுப்பூசி செலுத்தவில்லையோ அவர்களை தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுரை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் காங்கிரஸ் கட்சி உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனுக்களை பெற்றுள்ளது தேர்தல் வரும் நேரத்தில் அது குறித்து முடிவு செய்யப்படும் திருவெற்றியூர் கட்டிட விபத்திற்கு திமுக அரசு காரணமாக முடியாது தி மு க ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் தான் ஆகி உள்ளது அதிமுக அரசுதான் பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தது எனவே இந்த விபத்திற்கு அவர்கள் தான் காரணமாக இருக்க முடியும் அரசாங்கம் கட்டும் பள்ளிக்கூடங்கள் குடியிருப்பு கட்டிடங்கள் மட்டும் 30 ஆண்டுகளில் இடிந்து விழுகிறது என்று சொன்னால் அதற்கு யார் காரணம் இது ஒரு சமூகப் பிரச்சனை

இனிவரும் காலங்களிலாவது மாநிலங்களில் தன்னுடைய மக்களுக்கு கட்டப்படும் கட்டிடங்கள் நிறைவான தரம் உள்ளதாக இருக்க வழிவகை செய்ய வேண்டும். இதன் மூலம் மக்களின் சொத்துகள் மீட்கப்படும் மக்களின் வரிப்பணம் வீனாக முடியாது .காங்கிரஸ் இல்லாமல் கூட்டணி அமைத்தால் அந்த கூட்டணி பாஜகவிற்கு பலனளிக்கும் இதை நாங்கள் செல்லுதை விட எங்கள் நண்பர்கள் சொல்வதை விட பாஜக வினுடைய நீண்ட நாட்கள் உறவோடு இருந்த சிவசேனா இதை தெரிவித்துள்ளது. மகாத்மா காந்தியையும் நேருவையும் கலங்க படுத்துவது தான் பாஜகவின் நோக்கம் பாஜகவில் முதன்மைப்படுத்து வதற்கு எந்த தலைவரும் இல்லை ஆகவே காங்கிரஸ் கட்சியிடம் இருந்து சர்தார் பட்டேலை எடுத்து வெளிப்படுத்தி வருகின்றனர் பாஜக தனது பல்வேறு அமைப்புகள் மூலமாக பல்வேறு கொலைகளை செய்து வருகின்றனர். மாமிசம் சாப்பிட்டதற்காக அப்பாவி மக்களை அடித்துக் கொல்கின்றனர் ஆனால் அதற்கு மோடி அரசாங்கம் இதுவரை எந்தவித பதிலும் கூறவில்லை. 

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஒரு வெறுப்பு பேச்சை பேசி வருகிறார் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது அருவருப்பாகவும் வெறுப்பு தன்மையுடன் பேசுவது செருப்பை எடுத்துக் காட்டுவதும் தமிழ் கலாச்சாரத்தை களங்கப்படுத்தும் செயலாகும்.கேலிக்குரிய அரசை பிரதமர் மோடி நடத்தி வருகின்றார் நாடாளுமன்றத்தில் எந்தவித விவாதமும் இன்றி மக்களுக்கு எதிரான சட்டங்களை இயற்றி வருகிறார் இது ஜனநாயகத்திற்கு எதிரானது. இந்திய மக்கள் அனைவரும் தாய் மதத்திற்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என மோகன் பகாவத் சொல்வது தவறான கருத்து இதை இந்திய மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஒரு மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறுவது அவரவர் சுய விருப்பம் அனைவரும் தாய் மதத்திற்கு திரும்ப வேண்டும் என்றால் தாய் மதத்தில் இருக்கக்கூடிய குறைகளை நீக்க வேண்டும் நான் ஒரு இந்து என்ற உரிமையில் இதைச் சொல்கின்றேன்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில துணை தலைவர் கோபன்னா; நேரு ஒரு மாயையின் மறுபக்கம் என்ற புத்தகம் வெளியீட்டு விழாவிற்கு அனுமதியளித்தது டி நகர் ராமகிருஷ்ணா பள்ளியை முற்றுகையிட உள்ளோம். மோடி ஒரு மாயையின் மறுபக்கம் என்ற புத்தகம் எழுதி அதனை வெளியிட ராமகிருஷ்ணா பள்ளி அனுமதி அளிப்பார்களா என்பதையும் அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டுள்ளோம். நேரு வரலாற்று ஆவணங்களை அழிப்பதற்கு பாஜக முயற்சிக்கின்றது. ஆனால் பாஜக வினரால் ஒருபோதும் நேருவின் புகழை அழித்துவிட முடியாது என்றும் கூறினார்.