Asianet News TamilAsianet News Tamil

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்... வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்... வேட்பாளார் தேர்வில் அரசியல் கட்சிகள் பிஸி!

அதிமுகவில் யார் போட்டியிடுகிறார்கள் என்பது இன்று இரவு தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் நாளையே அல்லது புதன்கிழமையோ அறிவிக்கப்படுவார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சி செப்டம்பர் 25 அல்லது 26ம் தேதியில் வேட்பாளரை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Nomination file start for vikravandi and nanguneri today
Author
Chennai, First Published Sep 23, 2019, 7:30 AM IST

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.Nomination file start for vikravandi and nanguneri today
தமிழகத்தில் காலியாக இருந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்கும் அடுத்த மாதம் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று முன் தினம் அறிவித்தது. இரு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக 30-ந் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் வேட்புமனுக்கள் மீது அக்டோபர் 1 அன்று பரிசீலனை நடைபெறும் வேட்புமனுவை அக்டோபர் 3-ஆம் தேதி திரும்ப பெறலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையத்து தேர்தலில் எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள் என்ற விவரம் அன்று மாலையே தெரியவரும்.

Nomination file start for vikravandi and nanguneri today
அக்டோபர் 21-ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்த பிறகு 24-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இன்று வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில், கட்சிகள் சார்பில் வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாகி உள்ளது. அதிமுக இரு தொகுதிகளின்  இடைத்தேர்தலிலும் போட்டியிடுகிறது. திமுக விக்கிரவாண்டி தொகுதியிலும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் நாங்குநேரி தொகுதியிலும் போட்டியிடுகிறது. இந்த இரு தொகுதிகளும் திமுகம் மற்றும் காங்கிரஸ் வசம் தொகுதிகள் ஆகும் Nomination file start for vikravandi and nanguneri today
அதிமுகவில் யார் போட்டியிடுகிறார்கள் என்பது இன்று இரவு தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் நாளையே அல்லது புதன்கிழமையோ அறிவிக்கப்படுவார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சி செப்டம்பர் 25 அல்லது 26ம் தேதியில் வேட்பாளரை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புகிறது. திமுக தவிர்த்து நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் போட்டியிடுகிறது. வேலூர் தேர்தலைப் போலவே இந்த முறையும் தேர்தல் களம் மும்முனை போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios