தப்பினார் தமிழிசை.... கனிமொழிக்கு தொடரும் சிக்கல்..!
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வேட்பு மனு மீதான பரிசீலினை நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வேட்பு மனு மீதான பரிசீலினை நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. கடந்த 19-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் வேட்பு மனு மீதான பரிசீலினை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதில் தூத்துக்குடியில் பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் வேட்பு மனு மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் இயக்குநராக உள்ள, கணவரின் வருமானம் மற்றும் குற்ற வழக்கு குறித்து வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை என திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழிசை மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதேபோல் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி வேட்பு மனு மீதான பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டது. பி-2 படிவத்தை நிரப்பாத காரணத்தால் கனிமொழி வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நீண்ட நேரம் பரிசீலனைக்கு பின்னர் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை மனுவை ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து கனிமொழி மனுவை பரிசீலித்து வருகின்றனர்.