இந்து முன்னணி தலைவர் இராமகோபாலன் மறைவையொட்டி சத்தியமங்கலத்தில் ஊர்வலம் நடைபெற்றது. இந்து முன்னணியினர் இடையே சலசலப்பு ஏற்பட்டதால் சுமார் ஒரு மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் காலமானதையொட்டி சத்தியமங்கலம், பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய பகுதிகளில்  இந்து முன்னணியினர் மற்றும் பிஜேபியினர் சார்பில் கடையடைப்பு நடைபெற்றது மேலும் மாலை 4 மணி அளவில் ராமகோபாலன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்து முன்னணி சார்பில் ஊர்வலம் நடைபெறும் என்று அறிவித்து இருந்தனர்.

வழக்கமாக கட்சி சார்ந்த ஊர்வலங்கள் எதுவாக இருப்பினும் சத்தியமங்கலம் எஸ்ஆர்டி கார்னர் பகுதியில் இருந்து பகுதி வரை ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். ஆனால் காவல்துறையினர் கோட்டுவீராம்பாளையம் பகுதியில் இருந்து பஸ் நிலையம் வரை மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதனால் எஸ்.ஆர்.டி கார்னர் பகுதியில் ராமகோபாலன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக காலையிலிருந்து காத்திருந்த இந்து முன்னணியைச் சேர்ந்த இளைஞர்கள் ஆத்திரமடைந்து எஸ்.ஆர்.டி காரிலிருந்து தாங்களாகவே ஊர் வலம் வருவோம் என கூறியதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இராமகோபாலன் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திவிட்டு அமைதியாக ஊர்வலம் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.இதனையடுத்து அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியனர்.