நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழகத்துக்கு ஜுன் மற்றும் ஜுலை மாதத்துக்கான 40.43  டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு தமிழத்துக்கு திறந்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் காவிரி ஆணையத்தின் உத்தரவை அம்மாநில அரசு செயல்படுத்தவில்லை.

இந்நிலையில் கடந்த நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. குறிப்பாக உப்பள்ளி, தார்வார், பீதர், பல்லாரி, கொப்பல் உள்ளிட்ட வடகர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

இதனிடையே   பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக நீர்வளத்துறை மந்திரி சிவகுமார், கர்நாடகாவின் நிலை குறித்து, காவிரி ஆணையத்திடம் தெரிவித்து விட்டடோம்.  மழை பொழியவில்லை என்றால் கர்நாடகாவின் நிலை மேலும் மோசமடையும்.  கர்நாடக விவசாயிகளுக்கே, தண்ணீர் இல்லை என்பதால், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க இயலாது என திட்டவட்டமாக தெரிவித்தார்..