Asianet News TamilAsianet News Tamil

இனி ஸ்கூலில் உள்ளேன் அய்யான்னு சொல்ல வேண்டாம்.. எல்லாமே ஸ்மார்ட்தான் !! அதிரடி செங்கோட்டையன் !!

தமிழகத்தில் பெரும்பாலான் பள்ளிகளில் ஸ்மார்ட் அட்டெண்டன்ஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் வகுப்பில் இனி உள்ளேன் அய்யா  எனறு சொல்லத் தேவையில்லை. மேலும் கிளாசை கட் அடித்துவிட்டு வெளியில் சென்று சுற்ற முடியாது.

No ullen ayya in schools all are change to smart
Author
Coimbatore, First Published Jan 19, 2019, 9:44 AM IST

தமிழகத்தில கல்வி அமைச்சராக செங்கோட்டையன் பெறுப்பேற்ற பிறகு அந்தத் துறையில் பல மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு  ஸ்மார்ட் அட்டெண்டன்ஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

No ullen ayya in schools all are change to smart

பள்ளிக்கல்வித்துறை அனைத்து பணிகளையும் டிஜிட்டல்மயமாக்க, அனைத்து மாவட்ட அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கும், தலா இரு பயோமெட்ரிக் கருவிகள், விநியோகிக்கப்பட்டுள்ளன.

இதை பொருத்தி, விரல் ரேகை பதிவு மூலம், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களின் வருகைப்பதிவு உறுதி செய்யப்படுகிறது. பள்ளி நேரத்தில் சில ஆசிரியர்கள், சொந்த பணிகள் மேற்கொள்ள, வெளியிடங்களுக்கு செல்வதாக எழும் புகார்களுக்கு, இதன் வாயிலாக முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

No ullen ayya in schools all are change to smart

கோவை, அசோகபுரம் மாதிரி பள்ளி மற்றும் ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில், ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப்பதிவுக்கான, ஸ்மார்ட் அட்டெண்டன்ஸ் கருவி, இம்மாத துவக்கத்தில் பொருத்தப்பட்டது.

No ullen ayya in schools all are change to smart
கோவை மாவட்டத்தில், இம்முன்னோடி திட்டம் இப்பள்ளியில் தான் முதன்முறையாக துவங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு நிமிடத்தில் 'ஓகே'சுமார் இரு வினாடிகளுக்கு ஒருவர் வீதம், ஒரு நிமிடத்தில், 30 மாணவர்களின் முகம் மற்றும் விரல்ரேகை ஆகிய பதிவுகளை 'டிக்' செய்து, வருகையை உறுதி செய்கிறது.காலை 9:00 மணிக்குள் ஒருமுறை, மதியம் 1:20க்குள் ஒருமுறை, என இரு முறை வருகைப்பதிவு மேற்கொள்ளப்படுகிறது. 

No ullen ayya in schools all are change to smart
அதிகபட்சம் 15 நிமிடங்களில், மாணவர்களின் வருகைப்பதிவு பணிகள் முடிந்துவிடும்.அடுத்த சில வினாடிகளில், இக்கருவியுடன் பொருத்தப்பட்ட கம்ப்யூட்டரில், வருகை புரிந்தோர், பள்ளிக்கு வராதோர் பட்டியல் தயாராகி விடுகிறது.

பள்ளிக்கு வராத மாணவருக்கு வருகைப்பதிவு மாற்றுவது, மதிய இடைவேளைக்குப் பின், மட்டம் போடுவது உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு, இத்திட்டத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கலாம்.மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios