நிச்சயம் விரைவில் நல்ல முடிவு எடுப்பேன் நான் எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும் அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மு.க.அழகிரி கூறியுள்ளார். 

மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய அழகிரி கூறியதாவது: கருணாநிதியிடம் இல்லாததையும் பொல்லாததையும் கூறி என்னை கட்சியில் இருந்து நீக்கி விட்டார்கள். என்றுமே பதவியை எதிர்பார்த்து திமுகவில்இருந்தது இல்லை. எம்.ஜி.ஆரின் கோட்டையாக இருந்த மதுரையை திமுகவின் கோட்டையாக மாற்றியது நான். மதுரை நமது கோட்டை. அதையாராலும் மாற்ற முடியாது. கருணாநிதியின் உழைப்பு தான் திருமங்கலம் தேர்தலின் வெற்றிக்கு காரணம்.

திமுகவில் இருந்து வைகோ விலகியபோது ஒரு தொண்டன் கூட திமுகவை விட்டு வெளியேவில்லை. சதிகாரர்கள், துரோகிகள் வீழச்சிக்கான முதற்படிப்பட்டு இந்த கூட்டம். குறைந்த வார்டு உறுப்பினர்கள் இருந்தாலும் துணை மேயர் தேர்தலில் சின்னசுவாமியை வெற்றி பெற செய்தோம். மதுரை திருமங்கலம் இடைத்தேர்தலில் மிகப்பெரிய பெற்றி பெற்றோம். திருமங்கலம்  தேர்தலில் ஜெயிக்கத் தவறியிருந்தால் திமுக ஆட்சியே அப்போது கையை விட்டு போயிருக்கும். சுமார் 40,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். திருமங்கலம் தேர்தலில் வேலை பார்க்குமாறு ஸ்டாலின், மாறன் சகோதரர்கள் என்னிடம் மன்றாடினர். திருமங்கலம் இடைத்தேர்தல் வெற்றிக்கு பணம் காரணம் இல்லை. எங்களின் உழைப்புதான் காரணம். குறிப்பாக தேர்தலில் கருணாநிதியின் உழைப்புதான் திருமங்கலம் தேர்தல் வெற்றியின் ஃபார்முலா என கூறியுள்ளார். 

மேலும், தென் மண்டல் அமைப்புச் செயலாளர் பொறுப்பை கொடுத்தபோது கூட வேண்டாம் என்றேன். பதவிக்கு ஆசைப்படவும் இல்லை, பதவியை எதிர்பார்த்து திமுகவில் என்றுமே நான் இருந்ததில்லை. மத்திய அமைச்சர் பதவி தேவையில்லை என்றேன், வலுக்கட்டாயமாக கலைஞர் எனக்கு கொடுத்தார். தென்மண்டல அமைப்புசெயலாளர் ஆனபின் திமுகவினர் எல்லோரும் என்னிடம் நடித்தனர். எனக்கு பொய் சொல்லவே தெரியாது. எப்போதும் உண்மையை பேசுவேன் என்றார். 

கருணாநிதிக்கு பிறகு நீதான் என்று ஸ்டாலினிடம் நான் கூறினேன். நீதான் எல்லாம் என்றேன். என் வீட்டில் தங்கியிருந்த மு.க.ஸ்டாலினிடம் எனக்கு எந்த பதவியும் தேவையில்லை என்றேன். மு.க.ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவி கிடைக்க நான் தான் கருணாநிதிக்கு பரிந்துரை செய்தேன். ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியை என்னிடம் கேட்டுத்தான் கருணாநிதி அளித்தார். ஆனால், நான் என்ன தவறு செய்தேன். எதற்காக என்னை திமுகவில் இருந்து நீக்கினீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்டாலின் ஏன் எனக்கு துரோகம் செய்தார் என்று தெரியவில்லை. திமுகவை பல இடங்களில் வெற்றிபெறச்செய்தேன் இது துரோகமா? எத்தனையோ பேரை அமைச்சர்களாக ஆக்கி உள்ளேன். ஒருவருக்கும் நன்றி இல்லை. உங்களுக்காக உழைக்க ஒரு தொண்டன் இருக்கிறான் என்றால் அது நான்தான்.

ஸ்டாலினால் ஒரு போதும் முதல்வராக வர முடியாது. என் ஆதரவாளர்கள் விடமாட்டார்கள் வருங்கால முதல்வரே என போஸ்டர்கள் ஒட்டப்பட்டாலும் அவரால் முதல்வராக நிச்சயமாக முடியாது. நான் முதல்வராக ஆசைப்படவில்லை. ஸ்டாலினுக்கு கூட வருங்கால முதல்வரே வருக என போஸ்டர் அடிக்கிறார்கள் .பிறந்த நாளுக்காக பொதுக்குழுவே வருக என கட்சியினர் போஸ்டர் அடித்ததில் என்ன தவறு? உடல் நிலை சரியில்லாத கருணாநிதியை கட்டாயப் படுத்தி திருவாரூரில் போட்டியிடசெய்தனர் .கருணாநிதியை மறந்து விட்டு இப்போது திமுகவை நடத்துகின்றனர்.அவருடன் ஒப்பிட்டு ஒரு சிலர் ஸ்டாலினை பேசுகி்ன்றனர். கருணாநிதிக்கு நிகர் அவரே தான். கருணாநிதிக்கு இருக்கும் ஞானம் யாருக்கு இருக்கிறது. அவரை ஸ்டாலின் மிஞ்சி விட்டார் என சிலர் பேசுகின்றனர். கருணாநிதியை மீண்டும் நாம்தான் நினைவுபடுத்த வேண்டும். அவர் நம் உயிர் என பேசியுள்ளார்.