ஒத்த மந்திரி கூட ஒரு நல்லதும் பண்ணல! அப்படியே காலம் நாசமா போனதுதான் மிச்சம்: கடித்து துப்பும் கருணாஸ்
“இப்ப நடந்துக்கிட்டு இருக்கிற இந்த ஆட்சியும், அமைச்சரவையும் சசிகலாவால் உருவாக்கப்பட்டது. ஆனா அவரையே கட்சியை விட்டு நீக்குனதாலதான் எதிர்த்தேன்.
அரசியல் ஒரு பரமபதம்! அப்படின்னு சும்மா சொல்லலை முன்னோர்கள். அவனவன் கஷ்டப்பட்டு ஒண்ணாம் நம்பர்ல இருந்து கொஞ்சம் கொஞ்சமா நகர்ந்து நூறாவது நம்பர்ல இருக்குற பதவியை பிடிக்க முயற்சிப்பான். ஆனால் 99-ம் நம்பர்ல இருக்குற பாம்பு பொட்டுன்னு போட்டு, சரசரன்னு சறுக்கி கீழே வந்து விழுவான். எத்தனை முறை ட்ரை பண்ணினாலும், துரதிர்ஷ்டம் துரத்தித்துரத்திக் கொத்தும்.
ஆனால் சில பேரையோ அதிர்ஷ்டமும், ஜாக்பாட்டும் வெச்சு செய்யும் வளமா. நம்ம லொடுக்குப் பாண்டி கருணஸோ இதுல ரெண்டாவது வகையை சேர்ந்த மனுஷன். கட்சி ஆரம்பிச்சுப் பத்துப் பதினஞ்சு வருஷமாகியும் ஒரு கவுன்சிலர் சீட் கூட பல பேரால ஜெயிக்க முடியாது. ஆனால் கருணாஸோ முந்தாநாள் அமைப்பு துவக்கி (நல்லா கவனியுங்க, கட்சி கூட கிடையாது வெறும் அமைப்புதான்), நேத்து கூட்டணி வெச்சு, இன்னைக்கு சீட் வாங்கி, இன்னைக்கே எம்.எல்.ஏ.வும் ஆன மாதிரி சும்மா கெளப்பிட்டாரு.
முக்குலத்தோர் புலிப்படைன்னு ஒரு கட்சியை ஆரம்பிச்ச கையோட அவரு கூட்டணி வெச்சது யார் கூட தெரியுமா, அம்மாம் பெரிய ஜெயலலிதாவோடு. சசிகலா புண்ணியத்தில் கூட்டணி கிடைத்து, சீட் கிடைத்து, ராமநாதபுரம் திருவாடானை தொகுதியின் எம்.எல்.ஏ.வானார். அ.தி.மு.க.வில் இருப்பவர்களை விட மிக மிக வெறித்தனமான சசி விசுவாசியாக இருந்தார் கருணாஸ்.
ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் சசி சிறை சென்ற பின்னும் அவரது விஸ்வாசம் கொஞ்சம் கூட குறையலை. ஆனால் சசியை கட்சியை விட்டு நீக்கியபோது எடப்பாடி அண்ட்கோவை மிக வெளிப்படையாக எதிர்த்த கருணாஸ், சமீப காலமாக முதல்வரிடம் ஓவராக பம்முமிறார். அவரும் இவரிடம் பாசம் காட்டுகிறார்.
இந்த நிலையில், பல விஷயங்கள் குறித்து பிரபல அரசியல் வாரம் இருமுறை இதழுக்கு பேட்டியளித்திருக்கும் கருணாஸ், அதில் போட்டுப் பொளந்திருக்கிறார் பல விஷயங்களை. அதன் ஹைலைட் பாயிண்டுகள் இதோ கருணாஸின் வாயாலேயே...“இப்ப நடந்துக்கிட்டு இருக்கிற இந்த ஆட்சியும், அமைச்சரவையும் சசிகலாவால் உருவாக்கப்பட்டது. ஆனா அவரையே கட்சியை விட்டு நீக்குனதாலதான் எதிர்த்தேன். ஆனா இப்ப முதல்வர் எடப்பாடியார் மக்களுக்கு நல்ல திட்டங்களைச் செய்து அவர்களின் மனதில் நீங்கா இடம் பிடிச்சுட்டு வர்றார். அதேநேரத்துல மக்கள் விரோத திட்டங்களை அரசாங்கம் கொண்டு வருமேயானால் நிச்சயம் நான் அதை எதிர்ப்பேன்.
என்னொட திருவாடானை தொகுதிக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்யக்கோரி நான் முதல்வரை சந்திச்சு இதுவரைக்கும் ரெண்டு மனுக்களை கொடுத்திருக்கேன்.
இப்ப இருக்குற முப்பது மந்திரிகளும் ஆளுக்கு ஒரு உதவியை பண்ணியிருந்தாலும் கூட என்னோட திருவாடானை தொகுதிக்கு எவ்வளவோ நல்லது நடந்திருக்கும். ஆனால் ம்ஹும் அவங்க எதுவுமே பண்ணலை. காலம் மட்டும்தான் கடந்து போயிருக்குது ஒரு பிரயோசனமும் இல்லாம.
சசிகலா சிறையில் இருந்து வந்ததும் அரசியலில் மாற்றம் வருமா?ன்னு கேட்கிறாங்க. சின்னம்மா சசிகலா சிறையிலிருந்து அடுத்தாண்டு வருவாரா என்பதே கேள்விக்குறியா இருக்குது. சசிகலாவின் விடுதலையில் அவரது குடும்பத்துக்கே விருப்பம் இருக்குறா மாதிரி தெரியலை. அதே நேரத்துல, சசிகலா விடுதலையானால் அ.தி.மு.க. வலுவடைஞ்சுடும்னு பயந்து சில கட்சிகளும் அவர் வெளியே வர விடாமல் தடுக்கும் முயற்சிகளை செய்யுதுன்னு தெரியுது. இதான் நிலைமை.” என்றிருக்கிறார்.
அதெல்லாம் சரிண்ணே, ரசினிகாந்த ஓவரா வைய்யுறீகளே அதுக்கு யாருண்ணே காரணம்?