no special class in summer says minister

கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக காற்றும் அதிக சூடேறி அனல் காற்றாக வீச தொடங்குகிறது. இதன் காரணமாக மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, பள்ளி தேர்வுகளை தள்ளி வைத்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு பிறப்பித்துள்ளார்

அதாவது வரும் 22 ஆம் தேதியிலிருந்து கோடை விடுமுறை என்றும், பின்னர் சில தினங்கள் கழித்து தேர்வு நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

குறிப்பாக கோடை விடுமுறையின் போது, சிறப்பு வகுப்புகள் நடத்தினால் அப்பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து மாணவர்களை பாதுகாப்பதற்காகவே, தேர்வை தள்ளி வைத்து அமைச்சர் செங்கோட்டையன் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பை நடத்தினால் அப்பள்ளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்