Asianet News TamilAsianet News Tamil

எங்களுக்கும் திமுகவுக்கும் வாய்க்கா வரப்பு தகராறு எதுவும் இல்லை !! வாண்ட்டடா சரண்டர் ஆன அழகிரி !!

திமுகவுடனான எங்கள் கூட்டணி சுமூகமான முறையில் உள்ளது  என்றும் கே.என்.நேருவின் பேச்சு எந்தவிதத்திலும் திமுக- காங்கிரஸ் உறவை பாதிக்காது என்றும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
 

No Problem  with dmk and congress
Author
Chennai, First Published Jun 22, 2019, 11:28 PM IST

தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க வலியுறுத்தி  திருச்சியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கே.என்.நேரு கலந்துகொண்டு பேசினார். அப்போது காங்கிரசுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லக்கு தூக்குவது என கேள்வி எழுப்பினார்.

மேலும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும் இது குறித்து கட்சித் தலைமையிடம் வலியுறுத்துவேன் என்றும் அவர் தெரிவித்தார். திமுகவைச் சேர்ந்த கே.என்.நேருவின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

No Problem  with dmk and congress

திமுக அதிக இடங்களில் வெற்றி பெறவேண்டும். காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக விலக வேண்டும் என நான் கூறவில்லை. நான் ஒரு திமுககாரர். திமுகதான் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்றுதான் நினைப்பேன். உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை கேட்போம் என காங்கிரஸ் கூறியதாக சில செய்திகளில் படித்தேன். அதன் அடிப்படைலேயே இந்த கருத்தை கூறினேன்' எனத் தெரிவித்திருந்தார்.

No Problem  with dmk and congress

இந்நிலையில், திமுகவுடனான எங்கள் கூட்டணி சுமூகமான முறையில் உள்ளது என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்கள் கூட்டணி சுமூகமான முறையில் உள்ளது. திமுகவோடும்  மதசார்பற்ற மற்ற கட்சிகளோடும் கூட்டணி சிறப்பாக செயல்படும் என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios