Asianet News TamilAsianet News Tamil

ஒன்னும் பிரச்சனை இல்லை..! எஸ்பி வேலுமணிக்கு வந்த தகவல்..! நேர்த்திக்கடன் செலுத்திய பின்னணி..!

கிட்டத்தட்ட 60 இடங்களில் நடைபெற்ற சோதனையின் போது சொல்லிக் கொள்ளும்படி எதுவுமே சிக்கவில்லை. சிக்கிய சொத்துகளுக்கும் உரியவர்கள் உரிய ஆவணங்களை வைத்திருந்ததாக கூறுகிறார்கள். பிற்பகலிலேயே சோதனையை சில இடங்களில் அதிகாரிகள் முடிக்க, அவசரப்பட்டு வெளியே வர வேண்டாம் என்று மேலிடததில் இருந்து வந்த உத்தரவை தொடர்ந்து சோதனை நடைபெறுவது போல் பல இடங்களில் பாவலா மட்டும் அதிகாரிகள் காட்டியுள்ளனர்.

No problem ..! Information received from SP Velumani ..!
Author
Tamil Nadu, First Published Aug 12, 2021, 10:43 AM IST

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை முடிவடைந்த மறுநாளே அவசர அவசரமாக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனத்தை முடித்துவிட்டு திரும்பியுள்ளார் எஸ்பி வேலுமணி.

செவ்வாயன்று காலையில் ஆரம்பித்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மாலையில் முடிந்துவிட்டது. கிட்டத்தட்ட 60 இடங்களில் நடைபெற்ற சோதனையின் போது சொல்லிக் கொள்ளும்படி எதுவுமே சிக்கவில்லை. சிக்கிய சொத்துகளுக்கும் உரியவர்கள் உரிய ஆவணங்களை வைத்திருந்ததாக கூறுகிறார்கள். பிற்பகலிலேயே சோதனையை சில இடங்களில் அதிகாரிகள் முடிக்க, அவசரப்பட்டு வெளியே வர வேண்டாம் என்று மேலிடததில் இருந்து வந்த உத்தரவை தொடர்ந்து சோதனை நடைபெறுவது போல் பல இடங்களில் பாவலா மட்டும் அதிகாரிகள் காட்டியுள்ளனர்.

No problem ..! Information received from SP Velumani ..!

சோதனையால் பெரிய அளவில் பலன் இல்லை என்பதை முதலமைச்சர் அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறையின் தலைமை தகவல் தெரிவிக்க, ஸ்டாலின் மிகவும் டென்சன் ஆகிவிட்டதாக சொல்கிறார்கள். இதனை அடுத்து அவர் அவசரமாக தனது வீட்டிற்கு புறப்பட்டுச் செல்ல, பின்னாடியே லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் கந்தசாமியும் ஸ்டாலின் வீட்டிற்கு சென்றுள்ளார். பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சோதனை தொடங்கிய நிலையில் எதுவும் சிக்கவில்லை என்று கூறினால் எப்படி என ஸ்டாலின் கேட்க, தகவல் முன்கூட்டியே லீக் செய்யப்பட்டு அவர்கள் உஷார் ஆகியுள்ளனர் என கந்தசாமி கூறியதாக சொல்கிறார்கள்.

No problem ..! Information received from SP Velumani ..!

எஸ்பி வேலுமணியை கைது செய்யவில்லை என்றால் அடுத்த முறை தன்னால் கோவைக்கே செல்ல முடியாது என்பது உங்களுக்கு தெரியாதா? என ஸ்டாலின் காட்டமாக கேட்டதாகவும், நிச்சயம் ஏதோ ஒரு வழியில் பிரச்சனையை சரி செய்வதாக கூறிவிட்டு கந்தசாமி சென்றுள்ளார். ஆனால் 60 இடங்களில் நடைபெற்ற சோதனையின் போது வேலுமணிக்கு வில்லங்கத்தை ஏற்படுத்தும் வகையில் எதுவும் சிக்கவில்லை என்கிறார்கள். இதனை அடுத்தே கடந்த 2017ம் ஆண்டு வேலுமணி மீது புகார் வந்த போது வெளியான அவர் தொடர்புடைய நிறுவனங்களின் டர்ன் ஓவர் விவரங்களை அனைத்து தொலைக்காட்சிகளிலும் மறுபடியும் மறுபடியும் ஒளிபரப்ப உத்தரவு வந்ததாக கூறுகிறார்கள்.

No problem ..! Information received from SP Velumani ..!

அதாவது சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என்பதை மறைக்க பழைய புகாரை ஏதோ புதிய தகவல் போல அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்ததாக சொல்கிறார்கள். ஆனால் இது எல்லாம் பழைய கதை என அதிமுக ஐடி விங் அதனை பட்டியல் போட்டு விளக்கிக் கொண்டிருந்தது. இதனிடையே காலை முதல் தன்னிடம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சென்ற பிறகு, கட்சிக்காரர்கள் சிலரின் செல்போனை வாங்கி முக்கியமான சிலரை வேலுமணி தொடர்பு கொண்டதாக சொல்கிறார்கள். அதிலும் தற்போது அதிகாரத்தில் இருக்கும் உச்சமான நபர் ஒருவரை நேரடியாக தொடர்பு கொண்டு, என்ன இது என அவர் கேட்க, பயப்பட வேண்டாம் ஒன்னும் சிக்கவில்லை என்று ஆறுதல் கூறியுள்ளார்.

No problem ..! Information received from SP Velumani ..!

இதனை அடுத்தே வேலுமணி எம்எல்ஏ ஹாஸ்டலில் இருந்து புறப்பட்டு நேராக எடப்பாடி பழனிசாமியை சென்று சந்தித்துள்ளார். அங்கு சுமார் இருபது நிமிடங்கள் பேசிவிட்டு நேராக வீட்டிற்கு சென்றவர் அங்கிருந்து தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பிறகு மறுநாள் அதிகாலையிலேயே வேலுமணி வீட்டில் இருந்த புறப்பட அவர் எங்கு செல்கிறார் என பரபரப்பு தொற்றிக் கொண்டது. நேராக விமான நிலையம் சென்ற அவர் தூத்துக்குடி விமானத்தில் ஏறவும் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு தான் அவர் திருச்செந்தூர் செல்லும் தகவல் கிடைத்தது.

அதாவது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தன்னை கடந்துவிட்டதாகவும் தனக்கு இதனால் எந்த சிக்கல் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட வேலுமணி ஏற்கனவே வேண்டியிருந்தது போல் திருச்செந்தூர் முருகனை தரிசித்துவிட்டு திரும்பியதாக சொல்கிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios