இந்த பொதுக்குழுவில் அழகிரி , கனிமொழிக்கு பதவிகள் எதுவும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. 

திமுக பொதுக்குழு பரபரப்புடன் கூடியுள்ளது. இரங்கல் மற்றும் அரசியல் தீர்மானங்கள் தவிர்த்து மு.க.ஸ்டாலினுக்கு தலைமை பதவி இந்த பொதுக்குழுவில் பரபரப்பான முடிவாக இருக்கும் எனபது அனைவரும் எதிர்பார்த்த ஒன்று. 

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக தலைவர் பதவியில் செயல்படுவது சிரமமாக உள்ள நிலையில் தலைமை பதவிக்கு ஸ்டாலினை கொண்டு வரும் தீர்மானம் வர உள்ளது. செயல் தலைவராக கிட்டத்தட்ட தலைவர் நிலைக்கு ஸ்டாலின் உயர்த்தப்பட உள்ளார்.

இதே போல் கட்சியில் பெண் பிரதிநிதியாக இருந்த கட்சியின் துணை பொது செயலாளர் சற்குணபாண்டியன் கடந்த ஆண்டு மறைந்தார். இந்த இடத்திற்கு கனிமொழி முயற்சி எடுத்து வருகிறார். ஆனால் இதற்கு ஸ்டாலின் ஒத்துகொள்ளவில்லை என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஆகவே காலியாக உள்ள துணைப்பொதுச்செயலாளர் பதவிக்கு யாரையும் நியமிக்காமல் பொதுக்குழு நிறைவு பெறுமா அல்லது எ.வ.வேலு போன்றோர் அந்த இடத்திற்கு நியமிக்கப்படுவார்களா எனபது பற்றி உறுதியான தகவல் இல்லை.

ஆனால் கனிமொழிக்கு முதன் முறையாக துணை அணியிலிருந்து கட்சி அணிக்கு தலைமைக்கு தரப்படும் என எதிர்பார்க்கப்பட்ட ஒன்று கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. அதே போல் கட்சிக்குள் மீண்டும் வர அழகிரி முயன்று வருகிறார். 

அவரும் கட்சியில் மீண்டும் தனக்கு தென் மண்டல அமைப்பு செயலாளர் பதவி வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கும் ஸ்டாலின் ஒத்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கட்சியில் மட்டுமே அனுமதி.பதவி இல்லை என்ற நிலைக்கு அழகிரி தள்ளப்பட்டுள்ளார். ஆகவே இந்த பொதுக்குழு ஸ்டாலினுக்கு மட்டுமே ஆதாயமாக இருக்கும் என அராசியல் நோக்கர்கள் கருதுவார்கள்.