கூடுதல் கட்டணம் வசூலித்த 5 பள்ளிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் அருகே மகளிர் சுய உதவி திட்டத்தின் கீழ் ஆவின் பாலகத்தை திறந்து வைத்த பின் சுமார் 11 கோடியே 18 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். 

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்;- தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. கொரோனா தாக்கம் குறைந்த பின்பு தான் பள்ளிகள் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும். கொரோனா சூழலால் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்குவதில் இந்தாண்டு தாமதம் ஏற்பட்டுள்ளது. 

இந்தாண்டு அரசுப் பள்ளிகளில் புதிதாக 3.24 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு பாட புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்த 5 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது  என்றார்.