அரசியல் விளம்பரங்களுக்கு இனி ட்விட்டரில் இடம் கிடையாது... ட்விட்டர் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!

ட்விட்டர் நிறுவனத்தின் அதிரடி முடிவு நவம்பர் 22-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தடையின் காரணமாக ட்விட்டர் வணிகம் கணிசமாகப் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதனால் சமூக ஊடங்களை பெருமளவில் பயன்படுத்தும் அரசியல் கட்சிகளும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
No political advertisement in twitter

ட்விட்டரில் இனி அரசியல் விளம்பரங்களுக்கு இடம் கிடையாது என்று ட்விட்டர் நிர்வாகத்தின் தலைமை அதிகாரி அதிரடியாக அறிவித்துள்ளார்.No political advertisement in twitter
உலகில் அதிக அளவில் மனிதர்கள் பயன்படுத்திவரும் ஒரு சமூக வலைதளம் ட்விட்டர். தங்கள் எண்ணங்களை, செயல்வடிவங்களை எனப் பலரும் ட்விட்டர் சமூக வலைத்தளம் மூலமே வெளிப்படுத்திவருகிறார்கள். குறிப்பாக அரசியல் தலைவர்கள் ட்விட்டரில் கணக்கு வைத்துக்கொண்டு தங்கள் தொண்டர்கள் மற்றும் மக்களோடு தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துவருகிறார்கள். அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் சமூக வலைதளங்களை பிரச்சார களமாகவே பயன்படுத்திவருகிறார்கள்.

No political advertisement in twitter
இந்நிலையில் அரசியல் விளம்பரங்களுக்கு இனி ட்விட்டரில் இடம் இல்லை என ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி  ஜாக் டோர்ஷே தெரிவித்துள்ளார். அதில், “உலக அளவில் அனைத்து அரசியல் விளம்பரங்களையும் ட்விட்டரில் நிறுத்த முடிவு செய்திருக்கிறோம். இணையதளம், சமூக வலைத்தளம் போன்ற சக்திவாய்ந்த கருவிகள் தவறான காரியங்களுக்குப் பயன்பட்டுவிடக் கூடாது. இதில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் அவர்களுடைய வாக்குரிமையிலும் தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

No political advertisement in twitter
ட்விட்டர் நிறுவனத்தின் அதிரடி முடிவு நவம்பர் 22-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தடையின் காரணமாக ட்விட்டர் வணிகம் கணிசமாகப் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதனால் சமூக ஊடங்களை பெருமளவில் பயன்படுத்தும் அரசியல் கட்சிகளும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios