Asianet News TamilAsianet News Tamil

பன்னீரை கைவிட்ட மோடி !! அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடம் இல்லை !!

னது மகனுக்கு மத்திய அமைச்சரவையில் கண்டிப்பாக இடம் கிடைக்கும் என ஓபிஎஸ் எதிர்பார்த்திருந்த நிலையில் அதிமுகவிலிருந்த யாருக்கும் இடம் ஒதுக்கப்படவில்லை. இதனால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

no place for admk in central ministry
Author
Delhi, First Published May 30, 2019, 9:14 PM IST

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக  தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றது.  இதனைத் தொடர்ந்து  நரேந்திர மோடி தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராக பதவியேற்றார். 

இந்த பதவியேற்பு விழா டெல்லி ஜனாதிபதி மாளிகையில் கோலாகலமாக நடைபெறுகிறது. பிரதமர் மோடியை அடுத்து அவருடைய அமைச்சரவையில் இடம்பெறுபவர்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டார். 

no place for admk in central ministry

மோடியை அடுத்து மத்திய அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் அமைச்சராக பதவியேற்றார். அதனையடுத்து பாஜக  தலைவர் அமித்ஷா மத்திய அமைச்சராக பதவியேற்றார். 

அவரையடுத்து நிதின் கட்கரி, சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன், ராம் விலாஸ் பஸ்வான் பதவியேற்றனர். தொடர்ந்து அமைச்சரவையில் இடம் பெறுவோர் பதவியேற்றுக் கொண்டனர்.

no place for admk in central ministry

மொத்தமாக 58 அமைச்சர்கள் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர். 24 பேர் கேபினட்அமைச்சர்களாகவும், 9 பேர் தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாகவும், 25 பேர் இணை அமைச்சர்களாகவும் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர்.

no place for admk in central ministry

ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  அதிமுகவின் ஓபி.ரவீந்திரநாத் குமார் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதனால்  அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios