மக்கள் நீதி மய்யம் கட்சி ஆட்சிக்கு வந்தால் இங்கு நிரந்தர முதலமைச்சர் கிடையாது என்றும், தனக்குப் பின்னால் தன் முன்னால் உள்ள தொண்டர்களும், அதன் பிறகு அடுத்து வரும் தொண்டர்களும்தான் முதலமைச்சராக தொடருவார்கள் என கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமலஹாசன் நேற்று மக்கள் நிதி மய்யம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.மதுரையில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கமல் இதனை அறிவித்தார். மேலும் புதிய கட்சிக்கான கொடியை ஏற்றிவைத்த கமலஹாசன், கட்சியின் கொள்கைகளையும் அறிவித்தார்.

இந்த கூட்டத்தில் பொது மக்கள் கேட்டிருந்த பல கேள்விகளுக்கு கமல் பதில் அளித்தார். அதில் உங்கள் வாரிசுகள் அரசியலுக்கு வருவார்களா?  என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், தன் முன்னாள் கூடியிருந்த ரசிகர்களைப் பார்த்து, நீங்கள் தான் என் வாரிசுகள். நீங்கள் அரசியலுக்கு வந்துவிட்டீர்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர். மக்கள் நீதி மய்யம் கட்சி ஆட்சிக்கு வந்தால் இங்கு நிரந்தர முதலமைச்சர் கிடையாது என்றும், தனக்குப் பின்னால் தன் முன்னால் உள்ள தொண்டர்களும், அதன் பிறகு அடுத்து வரும் தொண்டர்களும்தான் முதலமைச்சராக தொடருவார்கள் என கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

திமுகவில் கருணாநியை அவரது தொண்டர்கள் நிரந்தர முதலமைச்சர் என்று அழைத்தார்கள், அதிமுகவில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை நிரந்தர முதல்வர் என அதிமுகவினர் தொடர்ந்து அழைத்து வந்தனர்.

அது போன்ற ஒரு நிலை மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஒரு போதும் இருக்காது என கமலஹாசன் உறுதிபடத் தெரிவித்தார்.