Asianet News TamilAsianet News Tamil

தமிழ் மண்ணில் அமீத்ஷாவை பார்த்து யாரும் பயப்பட மாட்டார்கள்.. அவர் ஏ.கே.47வுடன் வருவாரா? அழகிரி நக்கல் பேச்சு.

பிகார் மந்திரிகள் போட்டியிட்ட இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. பிகார் மந்திரிகள் அதிக செலவு செய்தனர். அதற்கு காங்கிரஸ் கட்சியால் ஈடு கொடுக்க முடியவில்லை. 

No one will be afraid to see Amit Shah on Tamil soil .. Will he come with AK47..? ks alagiri.
Author
Chennai, First Published Nov 16, 2020, 10:25 AM IST

தமிழ் மண்ணில் அமீத்ஷாவை பார்த்து யாரும் பயப்பட மாட்டார்கள் என சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி பேட்டி அளித்துள்ளார்.  அதில் அவர் பேசியதாவது: 

அமீத்ஷா என்ன தீவிரவாதியா எதிர்கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்த. கையில் என்ன ஏ.கே.47வுடன் வருவாரா. ஜனநாயக நாட்டில் யாரை பார்த்தும் யாரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. தமிழ் மண்ணில் அமீத்ஷாவை பார்த்து யாரும் பயப்பட மாட்டார்கள். முருகன் கற்பனையில் வாழ்கிறார். நிஜ உலகிற்கு வர சொல்ல வேண்டும். பிகார்  மாநிலத்தில் வெற்றி பெற்றவர்களுக்கும் வெற்றி பெறாதவர்களுக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் 12700 தான். 

No one will be afraid to see Amit Shah on Tamil soil .. Will he come with AK47..? ks alagiri.

இந்தியாவில் இவ்வளவு குறைவான வாக்கு வித்தியாசத்தில் ஒரு ஆட்சி அமைந்தது கிடையாது. யாரும் இந்த வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்ததும் கிடையாது. பிகார் மாநில தேர்தலை பொறுத்தவரை காங்கிரஸ் கூட்டணிக்கு மாபொரும் வெற்றி தான். கூட்டணியில் எந்த கட்சி அதிகமாக பெற்று இருக்கிறது. குறைவாக பெற்று இருக்கிறது என்று பார்ப்பதில்லை. கூட்டணியில் எவ்வளவு இடங்களை பெற்று இருக்கிறோம் என்பதை தான் பார்க்க வேண்டும். பிகாரில் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பிகார் மந்திரிகள் போட்டியிட்ட இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. பிகார் மந்திரிகள் அதிக செலவு செய்தனர். அதற்கு காங்கிரஸ் கட்சியால் ஈடு கொடுக்க முடியவில்லை. 

No one will be afraid to see Amit Shah on Tamil soil .. Will he come with AK47..? ks alagiri.

காங்கிரஸ் கட்சியில் பணம் இல்லை. பிகார் மாநிலத்தை வைத்து மற்றொரு மாநிலத்திலும் அப்படி நடக்கும் என்று சொல்ல முடியாது. தமிழகத்தில் 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 10 இடங்களை பெற்று 9 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதை தான் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும். பாட்டிக்காலத்தில் என்ன நடந்தது என்பதை கணக்கில் எடுத்தால் எப்படி சரியாக இருக்கும். காங்கிரஸ் கட்சி உள்ள கூட்டணி வெற்றி பெற கூடிய கூட்டணி. மோடியை வெல்ல முடியாது என்றவர்களுக்கு பிகார் தேர்தல் சரியான படிப்பினை. மோடியை வீழ்த்த முடியும் என்பதை பிகார் தேர்தல் நிரூபித்து உள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios