தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது அதை சீர்குலைக்க சிலர் முயற்சிக்கிறார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். 

சேலம் மாவட்டம் ஒமலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி;- தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது. அதை சீர்குலைக்க சிலர் முயற்சிக்கின்றனர். ஏற்கனவே பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு அமைச்சர் ஜெயக்குமார் பதில் கூறியுள்ளார். உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெற்றது. தேர்தலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. தேர்தல் பணிகளில் அரசு அதிகாரிகள் நேர்மையாக செயல்பட்டார்கள். வேண்டுமென்ற இதுபோல தவறான தகவலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்பி வருகிறார். 

சிஏஏ, என்ஆர்சி விவகாரத்தில் தமிழகத்தில் எந்த சிறுபான்மை மக்களும் அச்சப்பட வேண்டியதில்லை. இந்த விவகாரத்தில் சில எதிர்க்கட்சி தலைவர்கள் வதந்தி பரப்புகிறார்கள். குறிப்பாக இஸ்லாமியர்கள் யாரும் தமிழகத்தில் அச்சபடத் தேவையில்லை. அதிமுக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்பதற்கு மத்திய அரசு விருதுகளே சான்று என்றார். மேலும், தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவாமல் இருப்பதற்காக கடல்வழி, தலைவழி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.