Asianet News TamilAsianet News Tamil

யாரையும் பார்க்க கூடாது! எதையும் பேசக்கூடாது! விமானம் ஏறும் முன்னரே எடப்பாடியாரை பயமுறுத்திய டெல்லி: வெளிச்சத்துக்கு வரும் ஷாக் தகவல்கள்!

No one can see Do not talk anything Delhi in edappadi palanisamy
No one can see Do not talk anything Delhi in edappadi palanisamy
Author
First Published May 5, 2018, 4:36 PM IST


காவிரி விவகாரம் பீக்கில் இருந்து கொண்டிருக்கிறது தமிழகத்தில். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் மத்தியமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ‘முதல்வரோ அல்லது துணைமுதல்வரோ காவிரி நீர் தொடர்பாக பிரதமரை சந்தித்துப் பேச டைம் கேட்கவேயில்லை இதுவரையில்.” என்று போட்டு உடைத்தார். இதற்கு அ.தி.மு.க. தரப்பிலிருந்து எந்த எதிர்ப்புமில்லை.

No one can see Do not talk anything Delhi in edappadi palanisamy

இந்நிலையில் கடந்த 2-ம் தேதியன்று டெல்லி கிளம்பினார் தமிழக முதல்வர். இதை கேள்விப்பட்டதும், ஆஹா! அச்சரா! நம்மாளு பிரதமரை சந்திச்சு காவிரியில உரிய பங்கை பெறுவதற்கான வழிகளை உருவாக்கப்போறார்! என்று நம்பினர் போராட்ட குழுக்கள். ஆனால் டெல்லி சென்ற முதல்வர் அப்படி எதையுமே செய்யவில்லை. அவர் பிரதமர் மோடியை சந்தக்கவுமில்லை, சந்திக்க முடியவுமில்லை.

டெல்லியில் வைத்து ‘மகாத்மா காந்தியின் 150 பிறந்தநாள் கொண்டாட்டங்கள் குறித்து குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும்  கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன்.கூட்ட அரங்கில் வாய்ப்பு கிடைத்தால் பிரதமரைச் சந்திப்பேன். மற்றபடி வேறு யாரையும் தனியாக சந்திக்கும் திட்டம் இல்லை.’ என்று முதல்வரே ஓப்பனாக அறிவித்துவிட்டார்.இது, பெரிய எதிர்பார்ப்பில் இருந்த எல்லோரையுமே மனம் நோக வைத்துவிட்டது. இந்நிலையில் கூட்டம் முடிந்தது முதல்வரால் பிரதமரைச் சந்திக்க முடியவில்லை. முதல்வர் தரப்பிலிருந்து பிரதமரை சந்திக்க முயற்சியும் மேற்கொள்ளவில்லை அங்கிருந்தபடி.

No one can see Do not talk anything Delhi in edappadi palanisamy

காவிரி வழக்கில் தமிழகம் சார்பாக வாதாடும் வழக்கறிஞர்கள், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் மட்டுமே முதல்வரை சந்தித்தனர். பின் மாலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் சிறப்பு அலுவல் அதிகாரி அருண்  நரேந்திரநாத் முதல்வரை சந்தித்து 20 நிமிடங்கள் பேசினார். அப்போது ‘15 நாட்களுக்குள் காவிரி ஸ்கீம் ஒரு இறுதி டிஸைனுக்கு வந்துவிடும்’ என்று நம்பிக்கை தந்தாராம் அவ்வளவே.

ஆனால் முதல்வர் எடப்பாடியார் பிரதமரை சந்திக்க அங்கிருந்தபடி ஏன் முயலவில்லை? என்று அலசியபோது “முதல்வர் தமிழகத்திலிருந்து கிளம்பும் முன்னரேயே இங்கிருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம் பேசி, டைம் கேட்டனர். ஆனால் ‘வாய்ப்பே இல்லை. தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டாம். அதேபோஒல் மத்திய அமைச்சர்கள் யாரையும் இந்த முறை உங்கள் முதல்வர் சந்திக்க வேண்டாம்.

No one can see Do not talk anything Delhi in edappadi palanisamy

என்று கட்டளைகள் பறந்து வந்ததாம். இந்த கட்டளைகள் பிரதமரின் கட்டளைகளே! என்றுதான் தமிழக உயரதிகாரிகள் மட்டத்தில் அலசப்பட்டது.” என்று தகவல் வருகிறது.ஆக தமிழ்நாட்டிலிருந்து முதல்வர் எடப்பாடியார் கிளம்பும்போதே டெல்லியில் அவர் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது! என்பதையெல்லாம் டெல்லியே ஸ்கெட்ச் போட்டு கொடுத்திருக்கிறது.

ஆக ஒரு பரந்த மாநிலத்தின் முதல்வராக இருந்தும் கூட தலைநகரில்  தனி சுதந்திரமில்லாத நிலையில் காணப்பட்ட எடப்பாடியார், அங்கே மீடியாவிடம் ‘காவிரி தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம். இதுவரை கிடைக்கவில்லை. பிரதமரைக் காவிரிக்காக சந்தித்தால், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இல்லாமல் சந்திக்க மாட்டேன்.’ என்று அவரையும் இழுத்துவிட்டதுதான் என்ன டிஸைனோ!

Follow Us:
Download App:
  • android
  • ios