நடிகர் ரஜினிகாந்தின் முடிவை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் நாங்களும் எதிர்பார்க்கிறோம் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- இயற்கையை கையாளுவதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய சாதனை படைத்துள்ளார். முதல்வர் மக்கள் நலன் கருதியே செயல்படுகிறார். ரஜினி நல்ல மனிதர் ரஜினியின் முடிவை மக்கள் அனைவரும் எதிர்பார்க்ககிறார்கள். மக்களுடன் நானும் ரஜினியின் முடிவை எதிர்பார்க்கிறேன்.

நிவர் புயலால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2,30,000 பேரை மீட்டு முகாமில் தங்க வைத்தோம். நிவர் புயலுக்கு உரிய நிவாரணத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்படும்.

திமுக விண்வெளியில் சென்று பிரச்சாரம் செய்தாலும் மக்கள் அவர்களை நம்பமாட்டார்கள். அதிமுகவையும் வீழ்த்த முடியாது. மதுரையில் ரூ.1,450 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு டிசம்பர் 4-ம் தேதி முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார் என அமைச்சர் உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.