Asianet News TamilAsianet News Tamil

தேர்தல் செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடும் பாமக வேட்பாளர் !! இரண்டு அய்யாக்களும் ஏமாத்தீட்டாங்ளேன்னு புலம்பல் !!

கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கோவிந்தசாமி தேர்தல் செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடுவதாகவும், பணம் தருகிறேன் என்று சொன்ன அய்யாக்கள் இருவரும் தற்போது அமைதியாகிவிட்டதாகவும் அவர் புலம்புகிறார்.

no money to caddallore pmk candidate
Author
Cuddalore, First Published Apr 13, 2019, 7:24 AM IST

வரும் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக மெகா கூட்டணி அமைத்துள்ளது. இநத கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் பாமக 7 தொகுதிகளில் போடியிடுகிறது.

இந்த மெகா கூட்டணி அமைப்பதற்கு முன்பு பாமக, கூட்டணி அமைக்க திமுகவுடனும் பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால் பேரம் படியாததால் அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்டதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வந்தன. 

no money to caddallore pmk candidate

இதனை திமுக தலைவர் ஸ்டாலின் கூட மாற்றம்.. முன்னோற்றம்… சூட்கேஸ் மணி என கிண்டல் செய்திருந்தார். இந்நிலையில் பாமக வேட்பாளர்களுக்கு அக்கட்சித் தலைமை தேர்தல் செலவுகளுக்காக சரியாக பணம் தருவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

no money to caddallore pmk candidate

இந்நிலையில் கடலுார் மக்களவைத்  தொகுதியில், அதிமுக  கூட்டணியில் போட்டியிடும்  பாமக  வேட்பாளர் கோவிந்தசாமி  தேர்தல் செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடி வருவதாக கூறப்படுகிறது. தேர்தல் செலவுக்கு பணம் தருவதாக சொல்லியிருந்த பாமக தலைமை தற்போது பணம் தராமல் ஏமாற்றி வருவதாக கோவிந்தசாமி புலம்பத் தொடங்கியுள்ளார்.

no money to caddallore pmk candidate

அதே நேரத்தில் கோவிந்தசாமியின் தேர்தல் செலவுக்கு அதிமுகதான் தற்போது பணம் கொடுத்து உதவி வருவதாக கூறப்படுகிறது. தொழில் துறை அமைச்சர், எம்.சி.சம்பத், பாமக வேட்பாளரை, அதிமுக  வேட்பாளராக நினைத்து  தேர்தல் செலவுகளை செய்து வருகிறார். 

இரண்டு அய்யாக்களும் தன் சொந்த வேட்பாளருக்கு கருணை காட்டினால், சம்பத்திற்கு சுமை குறையும் வாய்ப்பு இருக்கிறது என, ஆளுங்கட்சியினர் புலம்புகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios